Published : 29 Aug 2025 01:00 AM
Last Updated : 29 Aug 2025 01:00 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் லிலாவாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் கவாரா ராம் கால்பெலியா, இவரது மனைவி ரேகா (55). இவருக்கு ஜடோல் பிளாக்கில் உள்ள சுகாதார மையத்தில் 17-வது குழந்தை பிறந்தது. பிரசவம் பார்த்த டாக்டர் ரோஷன் தராங்கி கூறும்போது, “ரேகாவுக்கு இது 4-வது குழந்தை என்றார். ஆனால், 17-வது குழந்தை என்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.
ரேகாவுக்கு குழந்தை பிறந்ததற்கு அவரது மகன்கள், மகள்கள், பேரக் குழந்தைகள், கிராமத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரேகாவுக்கு இது 17-வது குழந்தையாக இருந்தாலும், 4 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 5 குழந்தைகள் பிரசவத்துக்குப் பிறகு இறந்துவிட்டன. தற்போது ரேகாவுக்கு 7 ஆண் குழந்தைகள் 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளன.
இதுகுறித்து கவாரா கூறும்போது, “எனது 2 மகன்கள், 3 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. என் மனைவி ஏற்கெனவே பாட்டியாகி விட்டார்” என்றார். பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார் கவாரா. குடும்பத்தில் பணக்கஷ்டம் இருந்தாலும், கடன் வாங்கிதான் பிழைப்பை நடத்துகிறேன்” என்கிறார் கவாரா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT