Published : 27 Aug 2025 10:06 AM
Last Updated : 27 Aug 2025 10:06 AM

திருப்பதி தேவஸ்தானத்தில் 4 வேற்றுமத ஊழியர் சஸ்பெண்ட்

திருப்பதி: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் அறங்​காவலர் குழு தலை​வ​ராக பி.ஆர். நாயுடு நியமனம் செய்​யப்​பட்​ட​தில் இருந்து, வேற்று மத ஊழியர்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இந்​துக்​கள் என கூறி, போலி சான்​றிதழ் கொடுத்து வேற்று மதத்தை தழு​வி, அந்த மதத்தை பின்​பற்றி வரும் தேவஸ்​தான ஊழியர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்டு வருகின்றனர்.

முதலில் 22 வேற்று மத ஊழியர்​கள் இடைக்​கால பணி நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இதனை தொடர்ந்து மேலும் 6 ஊழியர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட நிலை​யில், தற்​போது மேலும் 4 ஊழியர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தேவஸ்​தானம் தெரிவித்துள்ளது.

அதன்​படி, இணை பொறி​யாளர் எலி​சார், தலைமை செவிலியர் ரோஸி, பார்​மஸிஸ்ட் பிரே​மாவ​தி, டாக்​டர் அசுந்தா ஆகிய 4 பேர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளனர். ஒரு மாபெரும் இந்து அறக்​கட்​டளை​யின் கீழ் இயங்​கும் திருப்​பதி தேவஸ்​தானத்​தில் நிபந்தனைகளை மீறி நடந்து கொண்​ட​தா​லும் மேற்​கண்ட 4 ஊழியர்​களும் உடனடி​யாக பணியி​லிருந்து இடைக்​கால நீக்​கம் செய்யப்​படு​வ​தாக தேவஸ்​தானம் ஓர் அறிக்கை மூலம் தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x