Published : 26 Aug 2025 07:50 AM
Last Updated : 26 Aug 2025 07:50 AM
புதுடெல்லி: இமய மலையில் உருவாகும் தாவி நதி (Tawi River), ஜம்மு காஷ்மீர் மாநிலம் வழியாக பாய்ந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் நுழைகிறது. கனமழை காரணமாக இந்த நதியில் தற்போது வெள்ளம் பெருக்கெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம், அந்நாட்டுக்கு இந்த வெள்ள அபாய எச்சரிக்கையை கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கி உள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. மேலும், சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
எனினும், பாகிஸ்தான் மக்களின் நலன் கருதி, நல்லெண்ணத்தின் அடிப் படையில் தாவி நதியில் வெள்ள அபாயம் ஏற்படும் என்ற தகவலை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி உள்ளது. கடந்த ஜூன் 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரையிலான காலத்தில் கனமழை, வெள்ளத்தில் பாகிஸ்தானில் 788 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT