Published : 26 Aug 2025 12:39 AM
Last Updated : 26 Aug 2025 12:39 AM

பொது இடங்களில் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை - முழு விவரம்

புதுடெல்லி: தமிழகத்​தில் பொது இடங்​கள், சாலை​யோரங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டுமென உயர் நீதி​மன்ற மதுரை கிளை பிறப்​பித்த உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதி்த்​துள்ள உச்ச நீதி​மன்​றம், தற்​போதைய நிலையே தொடர உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரை கொடிக்​குளத்​தைச் சேர்ந்த அமா​வாசை தேவர் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில், விளாங்​குடி​யில் அதி​முக சார்​பில் கொடிக்​கம்​பம் அமைக்க அனு​மதி கோரி தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த நீதிபதி ஜி.கே.இளந்​திரையன், பொது இடங்​கள், சாலைகள், உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​குச் சொந்​த​மான இடங்​களில் நிரந்​தர​மாக வைக்​கப்​பட்​டுள்ள அனைத்து அரசி​யல் கட்​சிகள், சாதி, மத மற்​றும் பிற அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டும் என்​றும், தேவைப்​பட்​டால் இந்த கொடிக் கம்​பங்​களை, அவர்​களுக்கு சொந்​த​மான இடங்​களில் வைத்​துக்​கொள்​ளலாம் என்​றும் உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவை எதிர்த்து தொடரப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜெ.நிஷா​பானு, எஸ்​.ஸ்ரீமதி ஆகியோர் அடங்​கிய அமர்​வு, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்​து, மேல்​முறை​யீட்டு மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டனர். உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யின் இந்த உத்​தரவை எதிர்த்து அமா​வாசை தேவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார். இந்த மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜெ.கே.மகேஸ்​வரி, விஜய் விஷ்னோய் ஆகியோர் அடங்​கிய அமர்வு அரசு நிலத்​தில் கொடிக்​ கம்​பங்கள் வைக்க எப்​படி அனு​மதி கோர முடி​யும், எனக்​கூறி உயர் நீதி​மன்ற உத்​தர​வில் தலை​யிட மறுப்பு தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் கொடிக் கம்​பங்​களை அகற்​றும் விவ​காரம் தொடர்​பான வழக்கை விசா​ரித்த 3 நீதிப​தி​கள் அடங்​கிய அமர்​வும், உச்ச நீதி​மன்ற உத்​தரவு அடிப்​படை​யில் கொடிக் கம்​பங்​களை அகற்​றும் உத்​தரவை கடந்த ஆக.14 அன்று உறுதி செய்​தது.

இந்​நிலை​யில், இந்த உத்​தரவை எதிர்த்து சிபிஎம் மாநில செய​லா​ளர் பி.சண்​முகம் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார். அதில், கொடிமரங்​களை அகற்ற வேண்​டும் என்​பது அரசி​யல் சாசன உரிமை, சமத்​து​வம், சுதந்​திர உரிமை​களைப் பறிப்​ப​தாகும். பொதுஇடங்​கள், சாலைகள், உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு சொந்​த​மான இடங்​களில் நிரந்​தர​மாக அமைக்​கப்​பட்​டுள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத மற்​றும் பிற அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டுமென தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவு மாநில அரசின் நி்ர்​வாக உரிமை​யில் தலை​யிடு​வ​தாகும். கருத்​துரிமை, பொது இடங்​களில் கூடும் உரிமை​களை மறுக்க முடி​யாது. கொடிகளை அகற்ற உத்​தர​விடும் முன்​பாக அரசி​யல் கட்​சிகளின் கருத்​துக்​களை​யும் கோர​வில்​லை. எனவே கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டுமென தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்து 3 நீதிப​தி​கள் அடங்​கிய அமர்வு பிறப்​பித்​துள்ள உத்​தர​வுக்கு தடை விதிக்க வேண்​டும். தற்​போதுள்ள நிலையே தொடர உத்​தர​விட வேண்​டும் எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மேல்​முறை​யீட்டு மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் விக்​ரம்​நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று நடை​பெற்​றது. மனு​தா​ரர் தரப்​பி்ல் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் எஸ். முரளிதர் மற்​றும் வழக்​கறிஞர் எஸ்​.பிரசன்னா ஆகியோர், இந்த வழக்கு விசா​ரணை​யில் சில முரண்​பாடு​கள் உள்​ளன. அனைத்து அம்​சங்​களை​யும் கருத்​தில் கொள்​ளாமல் உயர் நீதி​மன்ற மதுரை கிளை இந்த உத்​தரவை பிறப்​பித்​துள்​ளது என வாதிட்​டனர்.

அதையடுத்து நீதிப​தி​கள், இந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் தமிழக அரசு உள்​ளிட்ட எதிர்​மனு​தா​ரர்​கள் பதிலளிக்க உத்​தர​விட்​டனர். அது​வரை தமிழகத்​தில் பொது இடங்​கள், சாலை​யோரங்​களில் உள்ள கொடிக் கம்​பங்​களை அகற்​றக்​கூ​டாது என்​றும், தற்​போதுள்ள நிலையே தொடர வேண்​டும் என்​றும் உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x