Published : 25 Aug 2025 08:02 AM
Last Updated : 25 Aug 2025 08:02 AM

காசா பகுதி மக்களுக்காக நிதி வசூலித்த சிரியா நாட்டைச் சேர்ந்தவர் குஜராத்தில் கைது

அகமதாபாத்: ​குஜராத்தில் போரால் பாதிக்​கப்​பட்ட காசா பகுதி மக்​களுக்கு உதவப் போவ​தாகக் கூறி, அது தொடர்​பாக வீடியோக்களை காட்டி மசூ​தி​களில் சிலர் நன்​கொடை வசூலிப்​ப​தாக புகார் வந்​தது. அதன் அடிப்​படை​யில், அகம​தா​பாத் நகரின் எல்​லிஸ் பிரிட்ஜ் பகு​தி​யில் உள்ள ஒரு ஓட்​டலில் தங்​கி​யிருந்த அலி மெகாத் அல்​-அ​சார் (23) என்​பவரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், அல்​-அ​சார் மற்​றும் 3 பேர் என மொத்​தம் 4 பேர் சிரி​யா​விலிருந்து சுற்​றுலா விசா மூலம் அகமதாபாத் வந்​துள்​ளனர். 4 பேரும் ஒரே ஓட்​டலில் தங்​கி​யிருந்​ததும் காசா மக்​களுக்​காக வசூலித்த நிதி​யைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்​ததும் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதனிடையே மற்ற 3 பேர் தலைமறை​வாகி உள்​ளனர். அவர்​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

இவர்​கள் 4 பேரும் அகம​தா​பாத்தில் வேவு பார்த்​த​தாக​வும் சிலருடன் தொடர்பு வைத்​திருந்​த​தாக​வும் சந்​தேகிக்​கிறோம். எனவே, அவர்​கள் எதற்​காக குஜ​ராத் வந்​தார்​கள், திரட்​டிய நிதியை எங்கு அனுப்​பி​னார்​கள் என்​பது குறித்​து, குஜ​ராத் தீவிர​வாத தடுப்புப் படை மற்​றும் தேசிய புல​னாய்வு அமைப்​பினருடன் இணைந்து தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x