Published : 24 Aug 2025 06:38 AM
Last Updated : 24 Aug 2025 06:38 AM

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 330 காச நோயாளிகளை தத்தெடுத்த சத்தீஸ்கர் ஆளுநர் ராமன் தேகா

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநில ஆளுநர் ராமன் தேகா, பிரதமர் நரேந்​திர மோடி​யின் காச நோய் (டி.பி.) இல்லா இந்​தியா பிரச்​சா​ரத்தை துரிதப்​படுத்தி வரு​கிறார். அவ்​வப்​போது இந்த பிரச்​சா​ரத்​தின் நிலை பற்றி ஆய்​வுக்​ கூட்​டங்​களை நடத்தி வரு​கிறார்.

மேலும் ராஜ்நந்த்​கான், பஸ்​தார், தாம்​தாரி மற்​றும் காரி​யாபந்த் ஆகிய மாவட்​டங்​களில் சிகிச்சை பெற்று வரும் காச நோயாளி​களை ராமன் தேகா ஏற்​கெனவே தத்​தெடுத்​திருந்​தார். ஆளுந​ராக பொறுப்​பேற்று ஒரு வருடம் முடிந்த நிலை​யில் மாநிலத்​தில் மீதம் உள்ள மாவட்​டங்​களில் சிகிச்சை பெறும் காச நோயாளி​களை​யும் தத்​தெடுத்​துள்​ளார். இதன்​மூலம் நிக்​ஷய் மித்ரா அந்​தஸ்து பெற்ற அவர், தத்​தெடுத்த நோயாளி​கள் எண்​ணிக்கை 330 ஆக அதி​கரித்​துள்​ளது. காச நோயாளி​களை தத்​தெடுப்​பவர்​களுக்கு நிக் ஷய் மித்ரா பட்​டம் வழங்​கப்​படு​வது குறிப்​பிடத்​தக்​கது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள தலைமை மருத்​துவ மற்​றும் சுகா​தார அதி​காரி​களுக்கு மாதந்​தோறும் தலா ரூ.500 நிதி வழங்கி வரு​கிறார். காச நோயாளி​களுக்கு சத்​தான உணவு வழங்​கு​வதை உறு​திப்​படுத்​து​வதற்​காக இந்த நிதி​யுத​வியை அவர் வழங்கி வரு​கிறார். காச நோயாளி​களை தத்​தெடுக்க தொழில​திபர்​கள், சமூக அமைப்​பு​கள் மற்​றும் பொது​மக்​கள் முன்வர வேண்​டும் என்று ஆளுநர்​ வேண்​டு​கோள்​ விடுத்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x