Published : 24 Aug 2025 06:23 AM
Last Updated : 24 Aug 2025 06:23 AM

50 சதவீத வரிவிதிப்பின் காரணமாக அமெரிக்காவுக்கான பெரும்பாலான தபால் சேவை ரத்து

புதுடெல்லி: அமெரிக்கா விதித்​துள்ள 50 சதவீத வரி​வி​திப்​பின் காரண​மாக ஆகஸ்ட் 25-ம் தேதி (​நாளை) முதல் அமெரிக்கா​வுக்​கான பெரும்​பாலான தபால் சேவையை தற்​காலிக​மாக ரத்து செய்​வ​தாக இந்​தியா அறி​வித்​துள்​ளது.

ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, ஆகஸ்ட் மாதத் தொடக்​கத்​தில் இந்​தி​யா​வுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்​தது. இதுத​விர, தற்​போது தபால் சேவைக்​கான சுங்க கட்​ட​ணத்​தி​லும் அமெரிக்கா மாற்​றம் செய்​துள்​ளது. அதாவது இந்​தி​யா​வில் இருந்து வெளி​நாடு​களுக்கு செல்​லும் பார்​சல்​களுக்கு இது​வரை விலக்கு அளிக்​கப்​பட்டு வந்​தது. தற்​போது சுங்​கக்​கட்​ட​ணம் செலுத்த வேண்​டிய நிலை உரு​வாகி உள்​ளது.

அமெரிக்கா விதித்​துள்ள 50 சதவீத வரிவ​ிதிப்பு காரண​மாக இந்​தி​யா​விலிருந்து அமெரிக்கா​வுக்கு தபால்​களை எடுத்​துச் செல்​வ​தில் கட்​ட​ணக் குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது. எந்த அளவுக்கு கட்​ட​ணங்​களை வசூலிப்​பது என்​ப​தில் ஏற்​பட்​டுள்ள குழப்​பத்​தால் தபால்​களை ஏற்க அமெரிக்கா​வுக்கு விமானங்​களை இயக்​கும் விமான நிறு​வனங்​கள் மறுத்து வரு​கின்​றன.இதையடுத்து ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்கா​வுக்​கான பெரும்​பாலான தபால் சேவை​களை தற்​காலிக​மாக இந்​தியா நிறுத்​தி​யுள்​ளது.

இதுதொடர்​பாக இந்​தியா போஸ்ட் நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த ஜூலை 30 -ம் தேதி அமெரிக்​கா​வால் அறிவிக்​கப்​பட்ட கடுமை​யான வரி விதிப்​பைத் தொடர்ந்து அதற்கு எதி​ராக வரும் ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்கா​வுக்​கான அஞ்​சல் சேவை தற்​காலிக​மாக நிறுத்​தப்​படு​கிறது. 800 அமெரிக்க டாலர் வரை மதிப்​புள்ள பொருள்​களுக்கு இது​வரை வரி விலக்கு அளிக்​கப்​பட்ட நிலை​யில் இனி அது ரத்து செய்​யப்​படு​கிறது. அமெரிக்கா​வுக்கு அனுப்​பப்​படும் அனைத்து சர்​வ​தேச அஞ்​சல் பொருள்​களும் அவற்​றின் மதிப்​பைப் பொருட்​படுத்​தாமல் சர்​வ​தேச அவசர பொருளா​தார ஆற்​றல் சட்​டத்​தின்​படி (ஐஇஇபிஏ) சுங்​கக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும்.

எனினும் 100 அமெரிக்க டாலர் வரை​யுள்ள பரிசுப் ​பொருள்​களுக்கு மட்​டும் வரி​விலக்கு அளிக்​கப்​படும். இதர பொருள்​களுக்கு வரியை வசூலித்த பிறகே அஞ்​சல் அனுப்ப வேண்​டும். வரும் 25-ம் தேதி முதல் கடிதங்​கள், ஆவணங்​கள் மற்​றும் சுமார் ரூ.9,000 (100 டாலர்) மதிப்​புள்ள பரிசுப் பொருட்​களைத் தவிர்த்​து, இந்​தி​யா​விலிருந்து அமெரிக்கா​வுக்​கான அனைத்து வகை​யான பார்​சல்​களும் நிறுத்தி வைக்​கப்​படு​கின்​றன.

ஏற்​கெனவே பார்​சல்​களை அனுப்ப பதிவு செய்​தவர்​கள், தபால் கட்​ட​ணத்தை திரும்​பப் பெற்​றுக் கொள்​ளலாம். வாடிக்​கை​யாளர்​களுக்கு ஏற்​பட்​டுள்ள இந்த சிரமத்​துக்கு தபால் துறை மிக​வும் வருந்​துகிறது. மேலும் அமெரிக்கா​வுக்​கான முழு சேவை​களை​யும் விரை​வில் மீண்​டும் தொடங்க அனைத்து சாத்​தி​ய​மான நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​படும்.இவ்​வாறு அதில் தெரிவிக்​கப் பட்​டுள்​ளது.

இதே​போல, ஆஸ்​திரி​யா, பிரான்​ஸ், பெல்​ஜி​யம் உள்​ளிட்ட நாடு​களும் அமெரிக்கா​வுக்​கான தபால் பார்​சல் சேவையை தற்​காலிக​மாக நிறுத்​தி​யுள்​ள​தாகத்​ தகவல்​கள்​ வெளி​யாகியுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x