Last Updated : 23 Aug, 2025 04:07 PM

 

Published : 23 Aug 2025 04:07 PM
Last Updated : 23 Aug 2025 04:07 PM

‘நான் கொல்லப்பட்டால் கட்சியும், நீங்களும்தான் பொறுப்பு’ - அகிலேஷுக்கு பெண் எம்எல்ஏ கடிதம்

லக்னோ: 'தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சமாஜ்வாதி கட்சியும், அகிலேஷ் யாதவும் தான் பொறுப்பு' என உத்தரப் பிரதேச மாநிலத்தின் சாயல் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பூஜா பால் கடிதம் எழுதியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட எம்எல்ஏ பூஜா பால், அகிலேஷ் யாதவுக்கு எழுதிய கடிதத்தில், “ நான் கொலை செய்யப்பட்டால், உண்மையான குற்றவாளி அகிலேஷ் யாதவ் தான். என் கணவர் பட்டப்பகலில் கொல்லப்பட்டார், எங்களுடன் நிற்பதற்கு பதிலாக, சமாஜ்வாதி கட்சி குற்றவாளிகளை காப்பாற்றியது. இன்று, எனக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றன, எனக்கும் அதே நிலை ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன்.

அகிலேஷ் யாதவ் குற்றவாளிகளுக்கு எதிராகப் போராடி எனக்கு நீதியை பெற்றுத் தருவார் என்று நான் நம்பினேன். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது. சமாஜ்வாதி கட்சியில், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பட்டியலினத்தவர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமே முதல் தரக் குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள், அவர்கள் கடுமையான குற்றவாளிகளாக இருந்தாலும் கூட.

எனது குடும்பத்திற்கு நீதியை உறுதி செய்ய அகிலேஷ் யாதவ் எதுவும் செய்யவில்லை. அதற்கு பதிலாக, சமாஜ்வாதி கட்சியும் சைஃபாய் குடும்பமும் எப்போதும் கொலையாளிகளுக்கு ஆதரவாக நின்றன. பாஜக அரசாங்கத்தின் கீழ்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். எனது நீக்கம் நியாயமற்றது மற்றும் பாரபட்சமானது. சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் சமூக ஊடகங்களில் என்னை மிரட்டி துஷ்பிரயோகம் செய்கின்றனர். நான் கொலை செய்யப்பட்டால், அதற்கு அகிலேஷ் யாதவும், சமாஜ்வாதி கட்சியும்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறினார்.

நடந்தது என்ன? - சமாஜ்​வாதி கட்​சி​யிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பெண் எம்​எல்ஏ பூஜா பால். இவரது கணவர் ராஜு பால் பகுஜன் சமாஜ் கட்​சி​யின் முன்​னாள் எம்​எல்ஏ. பிரயாக்​ராஜ் மேற்கு தொகு​தி​யில் கடந்த 2004-ம் ஆண்டு நடை​பெற்ற இடைத் தேர்​தலில் ரவுடி அதிக் அமது​வின் சகோ​தரர் அஸ்​ரப் என்​பவரை, ராஜு பால் தோற்​கடித்து வெற்றி பெற்​றார். இதன் காரண​மாக, ஏற்​பட்ட விரோதத்​தால் கடந்த 2005-ம் ஆண்டு ராஜு பால் கொலை செய்யப்பட்​டார். இந்த வழக்​கின் முக்​கிய சாட்​சி​யாக இருந்த உமேஷ் பால் என்​பவரும் கடந்த 2023-ம் ஆண்டு சுட்டுக் கொல்​லப்​பட்​டார்.

அதன்​பின் அதிக் அகமது​வின் மகன் ஆசாத், ஜான்சி அருகே நடை​பெற்ற என்​க​வுன்ட்​ரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். அடுத்த சில நாட்​களில் அதிக் அகமது மற்​றும் ஆஸ்ரப் கைது செய்​யப்​பட்டு மருத்​துவ பரிசோதனைக்கு சென்​ற​போது 3 பேர் கும்​பலால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர்.

இந்​நிலை​யில் சட்​டப்​பேர​வை​யில் சமீபத்தில் சமாஜ்​வாதி எம்​எல்ஏ பூஜா பால் பேசும்போது, “என் கணவரை கொன்றது யார் என அனை​வருக்​கும் தெரி​யும். எனது கோரிக்​கையை யாரும் கேட்​க​வில்​லை. எனது கணவரை கொன்ற அதிக் அகமது​வை, முதல்​வர் புதைத்து விட்​டார். எனது கணவர் கொலைக்கு நீதி வழங்​கிய முதல்​வருக்கு நன்​றி. பிர​யாக்​ராஜில் பல பெண்​களுக்கு முதல்​வர் நீதி வழங்​கி​யுள்​ளார். ஒட்டு மொத்த மாநில​மும் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்தை நம்​பிக்​கை​யுடன் பார்க்​கிறது” என்றார்.

இதையடுத்​து, பூஜாவை கட்​சியி​லிருந்து நீக்கி சமாஜ்​வாதி கட்சி தலை​வர் அகிலேஷ் யாதவ் உத்​தர​விட்​டார். “பல முறை எச்​சரிக்கை விடுத்​தும், கட்சி விரோத நடவடிக்​கை​களில் ஈடு​பட்​ட​தால், அவர் கட்​சியி​லிருந்து உடனடி​யாக நீக்​கப்​படு​கிறார்​” என அகிலேஷ் ​குறிப்​பிட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x