Published : 23 Aug 2025 07:20 AM
Last Updated : 23 Aug 2025 07:20 AM

ஹைதராபாத்தில் வீட்டில் புகுந்து 11 வயது சிறுமி கொலை

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் கூகட்​பல்லி சங்​கீத்​நகர் பகு​தியை சேர்ந்​த கிருஷ்ணா - ரேணு​கா தம்பதிக்கு 6-ம் வகுப்பு படிக்​கும் சகஸ்ரா (11) என்​கிற மகளும், 2-ம் வகுப்பு படிக்​கும் 7 வயதில் ஒரு மகனும் உள்​ளனர்.

கடந்த திங்​கட்​கிழமை 18-ம் தேதி காலை வழக்​கம்​போல் கிருஷ்ணா​வும், ரேணுகா​வும் பணிக்கு சென்​றனர். 7வயது மகனும் பள்​ளிக்கு சென்​றான். ஆனால், ஸ்போர்ட்ஸ் டே வை முன்​னிட்டு மகள் சகஸ்ரா மட்​டும் வீட்​டில் தனி​யாக இருந்​துள்​ளார்.

பணி முடிந்து வீடு திரும்பிய ரேணுகா, சகஸ்ரா ரத்த வெள்​ளத்​தில் இறந்து கிடந்​ததை பார்த்து அலறி​னார். தகவல் அறிந்து வந்த போலீஸார் சிசிடிவி கேம​ராக்​களை ஆய்வு செய்து 10-ம் வகுப்பு படிக்​கும் ஒரு மாணவனை கைது செய்து வி​சா​ரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x