Published : 21 Aug 2025 07:07 AM
Last Updated : 21 Aug 2025 07:07 AM

பிரதமர் மோடி நாளை பிஹார், மே.வங்கம் பயணம்: ரூ.18,000 கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி நாளை (ஆக. 22) பிஹார் மற்​றும் மே.வங்​கத்​தில் பயணம் மேற்​கொள்​கிறார். அப்​போது ரூ.18,000 கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை அவர் தொடங்கி வைக்​கிறார்.

பிரதமர் நரேந்​திர மோடி தனது இரு மாநிலப் பயணத்தை பிஹாரில் தொடங்​கு​கிறார். கயா​வில் காலை 11 மணிக்கு தொடங்​கும் விழா​வில் பங்​கேற்​கும் அவர் ரூ.13,000 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை மக்​களுக்கு அர்ப்​பணிக்​கிறார்.

இதையடுத்து மேற்கு வங்​கம் செல்​லும் அவர் கொல்​கத்​தா​வில் மாலை 4.15 மணிக்கு தொடங்​கும் விழா​வில் பங்​கேற்​கிறார். அங்கு ரூ.5,200 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை தொடங்கி வைக்​கிறார். இரு மாநிலங்​களி​லும் பொது மக்​களிடையே பிரதமர் உரை​யாற்​றுகிறார்.

8.15 கி.மீ. நீளத்​துக்கு பாலம்: பிரதமரின் பிஹார் பயணத்​தில் போக்​கு​வரத்து இணைப்​பு, மின்​சா​ரம், சுகா​தா​ரம் மற்​றும் நகர்ப்​புற மேம்​பாட்டு திட்​டங்​கள் தொடங்கி வைக்​கப்பட உள்​ளன. பாட்னா மாவட்​டம் மொகா​மா​வில் இருந்து பெகுச​ராய் மாவட்​டத்​துக்கு நேரடி இணைப்பை ஏற்​படுத்​தும் வகை​யில் ரூ.1,870 கோடி செல​வில் 8.15 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்​டப்​பட்​டுள்​ளது. கங்கை ஆற்​றில் 1.86 கி.மீ. தொலை​வுக்கு கட்​டப்​பட்ட 6 வழிப் பால​மும் இதில் அடங்​கும்.

இந்த சாலை உட்பட பல்​வேறு திட்​டங்​களை மக்​கள் பயன்​பாட்​டுக்கு பிரதமர் திறந்து வைக்​கிறார். கயா - டெல்லி இடையி​லான அம்ரித் பாரத் ரயில் உட்பட 2 ரயில் சேவை​களை தொடங்கி வைக்​கிறார். மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் 13.61 கி.மீ. தொலைவி​லான 3 மெட்ரோ ரயில் பாதைகள் மற்​றும் பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை பிரதமர் தொடங்கி வைக்​கிறார். ரூ.1,200 கோடி செலவி​லான 7.2 கி.மீ. நீள 6 வழி உயர்​மட்ட சாலைக்​கு அடிக்​கல்​ நாட்​டு​கிறார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x