Published : 20 Aug 2025 07:55 AM
Last Updated : 20 Aug 2025 07:55 AM

ஜிஎஸ்டி 2 அடுக்கு வரி சீர்திருத்தம் தொடர்பாக அமைச்சர்கள் குழுவினருடன் நிதியமைச்சர் இன்று கலந்துரையாடல்

புதுடெல்லி: மாநில அமைச்​சர்​கள் குழு கூட்​டம் டெல்​லி​யில் இன்​றும், நாளை​யும் நடை​பெற உள்​ளது. இதில் 2-அடுக்கு ஜிஎஸ்டி வரி சீர்​திருத்​தம் தொடர்​பாக அமைச்​சர்​கள் குழு​வுடன் நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கலந்​துரை​யாட உள்​ளார். ஜிஎஸ்டி எனப்​படும் சரக்கு மற்​றும் சேவை வரி விகிதம் தற்​போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்​கு​களாக உள்​ளது.

இந்த நிலை​யில், கடந்த வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் உரை​யாற்​றிய பிரதமர் நரேந்​திர மோடி, நாட்டு மக்​களுக்கு நற்​செய்​தி​யாக தீபாவளிக்​குள் பொருட்​களுக்​கான ஜிஎஸ்டி வரி கணிச​மாக குறைக்​கப்​படும் என்ற அறி​விப்பை வெளி​யிட்​டார். அதாவது குறைந்த பட்​சம் 5 சதவீதம், அதி​கபட்​சம் 18 சதவீதம் கொண்ட இரு அடுக்​கு​களாக ஜிஎஸ்டி வரியை சீர்​திருத்​தம் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

இதன்​படி, தற்​போது 12 சதவீத வரி விதிப்​பில் உள்ள பொருட்​கள் 5 சதவீதத்​தின் கீழ் கொண்டு வரப்​படும். 28 சதவீத வரி விதிப்​பில் உள்ள 90 சதவீத பொருட்​கள் 18 சதவீத வரி​வி​திப்​புக்​குள் கொண்​டு​வரப்​படும். இதன் மூலம், பொருட்​களின் விலை குறைந்து சாமானிய மக்​களுக்கு நிதி சுமையி​லிருந்து விடு​தலை கிடைக்​கும். இதுத​விர, 40 சதவீத சிறப்பு வரி விதிப்​பும் அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளது. அதில், ஆன்​லைன் விளை​யாட்​டு, பான்​ம​சாலா, புகை​யிலை உட்பட 5 முதல் 7 பொருட்​கள் மட்​டுமே இடம்​பெற உள்​ளது.

2 அடுக்​கு​களாக ஜிஎஸ்டி மாற்​றப்​படு​வது குறித்து ஜிஎஸ்டி வரி சீர்​திருத்​தத்​துக்​கான அமைச்​சர்​கள் குழு​வின் பரிசீலனைக்கு பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது. பிஹார் மாநில துணை முதல்​வர் சாம்​ராட் சவுத்ரி தலை​மையி​லான ஆறு உறுப்​பினர்​கள் அடங்​கிய இக்​குழு​வில் பல்​வேறு மாநிலங்​களின் முக்​கிய அமைச்​சர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர்.

இந்த மாநில அமைச்​சர்​கள் குழு கூட்​டம் தலைநகர் டெல்​லி​யில் இன்​றும் நாளை​யும் நடை​பெற உள்​ளது. இதில், 2 அடுக்​கு​களாக ஜிஎஸ்டி மாற்​றப்​படு​வது குறித்து விரி​வாக விவா​திக்​கப்பட உள்​ளது. இந்த அமைச்​சர்​கள் குழு​வில் மத்​திய நிதி அமைச்​சருக்கு எந்த பொறுப்​பும் இல்​லை. அவர் உறுப்​பினரும் இல்​லை. இருப்​பினும், வரி சீர்​திருத்​தத்​தின் பின்​னணி மற்​றும் அதன் முக்​கி​யத்​து​வம் குறித்து எடுத்​துரைப்​ப​தற்​காக இந்த கூட்​டத்​தில் பங்​கேற்று நிர்​மலா சீதா​ராமன் முக்​கிய உரை​யாற்ற உள்​ளார்.

மத்​திய அரசின் ஜிஎஸ்டி வரி சீர்​திருத்த முன்​மொழிவை மாநில அமைச்​சர்​கள் குழு ஏற்​றுக்​கொள்​ளும்​பட்​சத்​தில் அடுத்த மாதம் நடை​பெறும் ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டம் அதுகுறித்து பரிசீலிக்​கும். ஜிஎஸ்டி கவுன்​சிலும் ஒப்​புதல் தரும்​பட்​சத்​தில் 2-அடுக்கு ஜிஎஸ்டி வரி​முறை நாடு முழு​வதும் அமலுக்கு வரும். இதன் மூலம், தீபாவளிக்கு முன்​ன​தாகவே பல்​வேறு பொருட்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x