Published : 20 Aug 2025 06:53 AM
Last Updated : 20 Aug 2025 06:53 AM

ரூ.75,000 கோடி முதலீட்டில் 3 கப்பல் கட்டும் தளங்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்

கோப்புப் படம்

புதுடெல்லி: இந்​தி​யா​வின் கிழக்கு மற்​றும் மேற்கு கடற்​கரை பகு​தி​களில் ரூ.75,000 கோடி​யில் 3 கப்​பல் கட்​டும் தளங்​களை உருவாக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

இதுகுறித்து மத்​திய துறை​முக அமைச்​சக வட்டாரங்கள் கூறுகை​யில், “இந்​தி​யா​வின் கிழக்கு மற்​றும் மேற்கு கடற்​கரைப் பகுதிகளில் 3 கப்​பல் கட்​டும் தொகுப்​பு​களை அமைக்க அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. ஒவ்​வொரு பசுமைக்கள (கிரீன்​பீல்​டு) கப்பல் கட்​டும் தொகுப்​பும் ரூ.25,000 கோடியில் உரு​வாக்​கப்​படு​ம்” என்று தெரி​வித்​துள்​ளன.

இதுகுறித்து அரசு வட்​டாரங்​கள் கூறுகை​யில், “கப்​பல் கட்​டும் தளங்​களை உரு​வாக்க உள்​நாட்டு மற்​றும் சர்​வ​தேச கப்​பல் கட்​டும் நிறு​வனங்​களு​டன் ஐந்து மாநிலங்​கள் பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டுள்​ளன. கப்​பல் கட்​டும் தளங்​களின் ஒன்​றில் ஒரு கப்​பல் உடைக்​கும் ஆலை​யும் உள்​ளடங்​கி​யிருக்​கலாம்.

இது, கப்​பல் கட்​டு ​மானங்​களுக்​கான பொருட்​களை வழங்க ஏது​வாக அமை​யும். இந்த கப்​பல் கட்​டும் தளங்​களை உரு​வாக்​கு​வதற்​கான திட்​டங்​களை இறுதி செய்​யும் பணி​யில் துறை​முகங்​கள், கப்​பல் போக்​கு​வரத்து மற்​றும் நீர்​வழிபோக்​கு​வரத்து அமைச்​சகம் ஈடு​பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​தன.

கடல்​சார் தொலைநோக்கு 2030 திட்​டத்​தின்​படி இந்​தி​யாவை கப்​பல் கட்​டும் துறை​யில் முதல் 10 இடங்​களுக்​குள்​ளும், 2047-க்​குள் முதல் 5 இடங்​களுக்​குள்​ளும் இடம்​பெறச் செய்​வதை இலக்​காக கொண்டு மத்​திய அரசு செயல்​பட்டு வரு​கிறது. இதற்​காக, துறை ​முகங்​கள், கப்​பல் போக்​கு​வரத்து மற்​றும் உள்​நாட்டு நீர்​வழித்​தடத்​தில் ரூ.3.5 லட்​சம் கோடி முதலீடு செய்யப்படவுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x