Published : 19 Aug 2025 07:46 AM
Last Updated : 19 Aug 2025 07:46 AM

உத்தராகண்ட்டில் உயிரிழந்ததாக கருதிய 3 பேர் உயிருடன் வீடு திரும்பினர்

கோப்புப் படம்

பாட்னா: உத்​த​ராகண்ட் மாநிலம் உத்​தர​காசியை அடுத்த தராளி கிராமத்​தில் கடந்த 5-ம் தேதி மேகவெடிப்பு ஏற்​பட்டு கனமழை கொட்​டியது. ராணுவ வீரர்​கள் மற்​றும் பொது​மக்​கள் பலர் காணா​மல் போயினர்.

இதனிடையே, பிஹார் மாநிலம் மேற்கு சம்​பரன் மாவட்​டத்​தைச் சேர்ந்த சுமார் 19 வயதுடைய 3 இளைஞர்​கள் உத்​தர​காசி பகு​திக்கு கூலி வேலைக்கு சென்​றுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள குடும்​பத்​தினர் முயன்​றுள்​ளனர்.

ஆனால், முடிய​வில்​லை. இதனால் வெள்​ளத்​தில் சிக்கி 3 பேரும் உயி​ரிழந்​திருக்​கலாம் என கரு​திய அவர்​களு​டைய குடும்​பத்​தினர் இறு​திச் சடங்​கு​களை செய்​தனர்.

இந்​நிலை​யில், அந்த 3 பேரும் உயிருடன் வீடு திரும்​பிய​தால் அவர்​களு​டைய குடும்​பத்​தினர் எல்​லை​யில்லா மகிழ்ச்சி அடைந்​தனர். இதுகுறித்து அவர்​கள் கூறும்​போது, “சம்​பவம் நடப்​ப​தற்கு 3 நாட்​களுக்கு முன்பே அங்​கிருந்து 6 கிலோ மீட்​டர் தொலை​வில் உள்ள கங்​கோத்ரி பகு​திக்கு வேலைக்​காக சென்​றோம். இதனால் நாங்​கள் உயிர் தப்​பினோம்​” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x