Published : 17 Aug 2025 12:40 AM 
 Last Updated : 17 Aug 2025 12:40 AM
புதுடெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, ‘குடியரசு துணைத் தலைவர் தேர்வு ஒருமனதாக நடைபெற்றால் வழக்கம் போல நியமனம் நடைபெறும். அப்படி இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்றுநடைபெறுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT