Published : 16 Aug 2025 07:45 AM
Last Updated : 16 Aug 2025 07:45 AM

சுதந்திர தின விழாவை தவிர்த்த ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்​டை​யில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் காங்​கிரஸ் எம்​.பி. ராகுல் காந்​தி, கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே ஆகியோர் நேற்று பங்​கேற்​க​வில்​லை. இரு​வரும் பங்​கேற்​காதது குறித்து அவர்​களிடம் இருந்தோ அல்​லது காங்கிரஸ் கட்​சி​யிட​மிருந்தோ அதி​காரப்​பூர்வ தகவல் எது​வும் இல்​லை.

என்​றாலும் கடந்த ஆண்டு இருக்கை ஏற்​பாட்​டில் ராகுல் காந்தி அதிருப்தி அடைந்​த​தால் அவர் இந்த ஆண்டு விழா​வில் பங்​கேற்​க வில்லை என்று தகவலறிந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

இரு தலை​வர்​களும் சமூக ஊடகம் மூலம் நாட்​டின் சுதந்​திரப் போராட்ட வீரர்​களுக்கு புகழாரம் செலுத்​தி, குடிமக்​கள் அனை​வருக்கும் தங்​கள் வாழ்த்​துகளைத் தெரி​வித்​தனர். டெல்​லி​யில் காங்​கிரஸ் தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் மல்​லி​கார்​ஜுன கார்கே பங்​கேற்​றார். அதேவேளை​யில் இந்​திரா பவனில் நடை​பெற்ற விழா​வில் ராகுல் பங்​கேற்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x