Published : 16 Aug 2025 07:30 AM 
 Last Updated : 16 Aug 2025 07:30 AM
புதுடெல்லி: குவைத் நாட்டில் இந்தியர்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு நேற்று விஷ சாராயம் குடித்த நிலையில் 63 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 63 பேரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் பெயர் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மற்ற அனைவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 21 பேருக்கு நிரந்தரமாக கண் பார்வை பறிபோய் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT