Published : 15 Aug 2025 05:47 AM
Last Updated : 15 Aug 2025 05:47 AM

நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தின கோலாகலம்: 12-வது முறையாக தேசிய கொடியேற்றுகிறார் பிரதமர்

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்​டை​யில் இன்று நடை​பெறும் சுதந்திர தின விழா​வில் 12-வது முறை​யாக பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்​றி, நாட்டு மக்​களுக்கு உரை​யாற்ற உள்​ளார். நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட உள்​ளது. இதற்​காக 28 மாநிலங்​கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்​கள், மாவட்ட தலைநகரங்​களில் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்​ளன.

தலைநகர் டெல்​லி​யில் அமைந்​துள்ள செங்​கோட்​டை​யில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்​களுக்கு உரை​யாற்ற உள்​ளார். அவர் தொடர்ச்​சி​யாக 12-வது முறை​யாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியேற்ற உள்​ளார்.

செங்​கோட்​டைக்கு வரும் பிரதமர் மோடியை மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், இணை அமைச்​சர் சஞ்​சய் சேத், செய​லா​ளர் ராஜேஷ் குமார் சிங் வரவேற்​பார்​கள். ராணுவம், கடற்​படை, விமானப் படை மற்​றும் டெல்லி காவல் துறையை சேர்ந்த வீரர்​களின் சிறப்பு அணிவகுப்பு மரி​யாதையை அவர் ஏற்​றுக் கொள்​வார்.

விழாவை ஒட்டி செங்​கோட்டை வளாகத்​தில் 3 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்​ளன. சுமார் 11,000-க்​கும் மேற்​பட்ட பாது​காப்பு படை வீரர்​கள் காவல், ரோந்து பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். செங்​கோட்டை வளாக பகு​தி​களில் சுமார் 3,000 போலீ​ஸார் போக்​கு​வரத்தை ஒழுங்​கு படுத்​தும் பணி​யில் ஈடு​பட்டு உள்​ளனர்.

ட்ரோன்​களை சுட்டு வீழ்த்​தும் தடுப்பு கவசங்​கள், வாக​னங்​களில் வெடிபொருட்​கள் இருக்​கிறதா என்​பதை கண்​டறி​யும் சிறப்பு கருவி​கள், முக அடை​யாளத்தை காண்​பிக்​கும் அதிநவீன சிசிடிவி கேம​ராக்​கள் உள்​ளிட்​டவை செங்​கோட்டை வளாகத்​தில் பொருத்​தப்​பட்டு உள்​ளன.

செங்​கோட்டை சுதந்​திர தின விழாவுக்​காக அச்​சிடப்​பட்​டிருக்​கும் அழைப்​பிதழில் ஆபரேஷன் சிந்​தூரின் சின்​னம் பொறிக்​கப்​பட்டு இருக்​கிறது. மேலும் ஆபரேஷன் சிந்​தூரை விவரிக்​கும் வகை​யில் செங்​கோட்டை வளாகத்​தில் சிறப்பு மலர் அலங்​காரம் செய்​யப்​பட்​டிருக்​கிறது. செங்​கோட்​டை​யில் 21 குண்​டு​கள் முழங்க பிரதமர் மோடி தேசிய கொடியேற்​றும்​போது ஹெலி​காப்​டர்​களில் இருந்து மலர்​கள் தூவப்​படும்.

செங்​கோட்டை சுதந்​திர தின விழா​வில் நாடு முழு​வதும் இருந்து 85 பஞ்​சா​யத்து தலை​வர்​கள், பாது​காப்​புப் படை, விளை​யாட்​டு, தன்​னார்வ தொண்டு ஊழியர்​கள் உட்பட ஒட்​டுமொத்​த​மாக 5,000 சிறப்பு விருந்​தினர்​கள் பங்​கேற்க உள்​ளனர். தேசிய கீதம் இசைக்​கும் இசைக் குழு​வில் முதல்​முறை​யாக 11 அக்​னி வீரர்​கள்​ பங்​கேற்​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x