Last Updated : 14 Aug, 2025 06:49 AM

 

Published : 14 Aug 2025 06:49 AM
Last Updated : 14 Aug 2025 06:49 AM

வெளிநாட்டு துப்பாக்கிகள் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது

பிஸ்டல் சலீம் 

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரராக இருப்பவர் பிஸ்டல் சலீம். டெல்லியின் ஜாப்ராபாத்தை சேர்ந்த இவரை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் 26 வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 800 தோட்டாக்களுடன் டெல்லி போலீஸார் பிடித்தனர். ஆனால் சிறையிலிருந்து ஜாமீன் பெற்றவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.

பிறகு வெளிநாடுகளில் இருந்தவாறு இந்தியாவுக்கு ஆயுதங்களை கடத்தி, டெல்லி, உ.பி., மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் சமூகவிரோதக் கும்பல்களுக்கு விற்பனை செய்துள்ளார். இவர் நேபாள எல்லையில் மறைந்திருப்பதாக டெல்லி போலீஸாருக்கு சில நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தேடலில் இறங்கிய டெல்லி போலீஸார் சலீமை கைது செய்து, நேற்று டெல்லி அழைத்து வந்துள்ளனர்.

பிஸ்டல் சலீம் துருக்கியில் தயாரிக்கப்பட்ட பல முக்​கிய அம்​சங்​களை கொண்ட ஜிகானா பிஸ்​டல்​களை இந்​தி​யா​வுக்கு கடத்​திய முதல் நபர் ஆவார்.

உ.பி.​யின் அலிகருக்கு அரு​கில் உள்ள குர்​ஜாவை சேர்ந்த ரிஸ்​வான், குர்​பான் என்ற இரண்டு சகோ​தரர்​கள் சலீ​முக்கு உதவி வந்​துள்​ளனர். சுமார் 5 ஆண்​டு​களுக்கு முன், இந்த மூவரும் நேபாளம் வழி​யாக ஜிகானா பிஸ்​டல்​களை இந்​தியா கொண்டு வந்​தனர். பிறகு இந்த பிஸ்​டல், சமூக​விரோத கும்​பல்​களின் முதல் தேர்​வாக மாறியது.

காரணம், இந்த பிஸ்​டலால் ஒரே நேரத்​தில் 15 தோட்​டாக்​களை சுட முடி​யும். ஒரு கிலோவுக்​கும் குறை​வான எடை​யில் இருக்​கும். வெறும் 9 எம்​.எம். தோட்​டக்​கள் இதில் பயன்​படுத்​தப்​படும்.

ஜிகானா பிஸ்​டல்​கள் பாகிஸ்​தான், நேபாளம் வழி​யாக இந்​தி​யா​வுக்கு கடத்​தப்​படு​கின்​றன. நேபாளத்​தில் இதன் பாகங்​கள் பிரிக்​கப்​பட்டு வாக​னங்​களில் மறைத்து இந்​தி​யா​வுக்கு கடத்தி வரப்​படு​கின்​றன. பிறகு இதன் பாகங்​கள் ஒன்று சேர்க்​கப்​பட்டு விற்​கப்​படு​கின்​றன. பாகிஸ்​தானில் இருந்து ட்ரோன் மூலம் வரும் பிஸ்​டலின் விலை சுமார் ரூ.4 லட்​ச​மாகும். அதே நேரத்​தில் நேபாளத்​தில் இருந்து வரும் பிஸ்​டலின் விலை ரூ.6 லட்​சம் வரை இருக்​கும்.

ஹாஷிம் பாபா, லாரன்ஸ் பிஷ்னோய், சோனு மோட்டா உள்​ளிட்ட நாட்​டின் பெரிய தாதா கும்​பல்​கள் சலீமிட​மிருந்து ஆயுதங்​களை வாங்கி தங்​கள் குற்​றச்​செயல்​களுக்கு பயன்​படுத்தி வரு​கின்​றன. பாலிவுட்​டில் பாபா சித்​திக்​கீ, பஞ்​சாபி பாடகர் மூஸே​வாலா, உ.பி.​யின் அத்​தீக் அகமது, அவரது சகோ​தரர் உள்​ளிட்ட முக்​கிய பலரின் கொலைகளில் ஜிகானா பிஸ்​டல் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இனி பிஸ்​டல் சலீமிடம் நடத்​தும் வி​சா​ரணை​யில் வட மாநிலங்​களின் பல முக்​கிய கொலை வழக்​கு​களில் துப்பு கிடைக்கும்​ என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x