Published : 13 Aug 2025 09:06 AM
Last Updated : 13 Aug 2025 09:06 AM

நீதிபதி யஷ்வந்த் பதவிநீக்க விவகாரம்: 3 பேர் அடங்கிய குழு விசாரிக்கும் - மக்களவை சபாநாயகர் உத்தரவு 

புதுடெல்லி: டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக பணி​யாற்​றிய யஷ்வந்த் வர்மா வீட்​டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு சென்ற தீயணைப்​புத் துறை​யினர் தீயை கட்​டுக்​குள் கொண்டு வந்​தனர். அப்​போது ஓர் அறை​யில் பல மூட்​டைகளில் கட்​டுக்​கட்​டாக பணம் பாதி எரிந்த நிலை​யில் இருந்​தது தெரிய​வந்​தது.

இதுகுறித்து தகவல் அறிந்த உச்ச நீதி​மன்​றத்​தின் அப்​போதைய தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா அலகா​பாத் உயர் நீதிமன்றத்துக்கு வர்​மாவை பணி​யிட மாற்​றம் செய்​தார்.

இதுகுறித்து விசா​ரிக்க தலைமை நீதிபதி ஒரு குழு அமைத்​தார். அக்​குழு தீவிர விசா​ரணை நடத்தி அறிக்கை சமர்ப்​பித்​தது. இதன் அடிப்​படை​யில் பதவி வில​கு​மாறு நீதிபதி யஷ்வந்த் வர்​மா​விடம் தலைமை நீதிபதி அறி​வுறுத்​தி​னார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்​து​விட்​டார்.

இதைத் தொடர்ந்து வர்​மாவை பதவி நீக்​கம் செய்ய நடவடிக்கை எடுக்​கு​மாறு குடியரசுத் தலை​வருக்​கும் பிரதமருக்​கும் தலைமை நீதிபதி கடிதம் அனுப்​பி​னார். இந்​நிலை​யில், நீதிப​தி​கள் விசா​ரணைச் சட்​டம் 1968-ன் கீழ் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது நடவடிக்கை எடுக்​கும் நோக்​கில், மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்லா 3 பேர் அடங்​கிய குழுவை அமைத்​துள்​ளார்.

உச்ச நீதி​மன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி மணிந்​திர மோகன் வஸ்​தவா மற்​றும் மூத்த வழக்​கறிஞர் பி.​வி.ஆச்​சார்யா ஆகியோர்​ இக்​குழு​வில்​ இடம்​பெற்​றுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x