Last Updated : 13 Aug, 2025 08:42 AM

 

Published : 13 Aug 2025 08:42 AM
Last Updated : 13 Aug 2025 08:42 AM

கர்நாடக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட‌ ராஜண்ணாவின் ஆதரவாளர்கள் காங். மேலிடத்துக்கு எதிராக போராட்டம்

பெங்களூரு: மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி அண்​மை​யில், 2024 மக்​கள​வைத் தேர்​தலில் பெங்​களூரு​வில் உள்ள மகாதேவப்​புரா சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் மட்​டும் ஒரு லட்​சத்​துக்​கும் அதி​க​மான வாக்​கு​கள் திருடப்​பட்​ட​தாக குற்​றம் சாட்டினார்.

இதுகுறித்து கர்​நாடக கூட்​டுறவுத் துறை அமைச்​ச​ராக இருந்த‌ கே.என்​.​ராஜண்​ணா, ‘‘கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் ஆட்​சி​யில் இருந்தபோதே வாக்​காளர் பட்​டியல் திருத்​தப்​பட்​டது. அதனை ஏன் காங்​கிரஸார் தடுக்​க‌​வில்​லை?'' என விமர்​சித்​தார். இந்த கருத்து காங்​கிரஸ் மேலிடத்​துக்கு கோபத்தை ஏற்​படுத்​தி​ய​தால் அவர் அமைச்​சர​வை​யில் இருந்து நீக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில் அவரது ஆதர​வாளர்​கள் நேற்று கர்​நாடக மாநிலம் மதுகிரி​யில் காங்​கிரஸ் மேலிடத்தை கண்​டித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மதுகிரி நகர கவுன்​சிலர் கிரிஜா மஞ்​சு​நாத் தலை​மை​யில் நடந்த போராட்​டத்​தில் 300-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர். அப்​போது காங்​கிரஸ் மேலிடத்​துக்கு எதி​ராக முழக்​கங்​களை எழுப்​பினர்.

இதுகுறித்து ராஜண்ணா கூறுகை​யில், ‘‘எனக்கு எதிராக சதி நடந்துள்ளது. டெல்லி சென்று மேலிடத் தலை​வர்​களை சந்தித்து எனது தரப்பு விளக்​கத்தை தெரி​விப்​பேன்' என்​றார்​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x