Published : 13 Aug 2025 07:30 AM
Last Updated : 13 Aug 2025 07:30 AM

கடந்த நிதியாண்டில் 2.17 லட்சம் கள்ள நோட்டு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: மக்​களவை​யில் நிதித் துறை இணை அமைச்​சர் பங்​கஜ் சவுத்ரி எழுத்​து​ மூலம் அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் 2.17 லட்​சம் எண்​ணிக்​கையி​லான பல்​வேறு மதிப்​பிலான கள்ள ரூபாய் நோட்​டு​கள் கண்டறியப்பட்டன. இது முந்​தைய ஆண்டு எண்​ணிக்​கை​யான 2.23 லட்சத்தை விட குறை​வாகும்.

இந்த 2.17 லட்​சம் கள்ள நோட்​டு​களில் 1,17,722 நோட்​டு​கள் ரூ.500 ஆகும். இதையடுத்து 51,069 நோட்​டு​கள் ரூ.100 மதிப்​பும், 32,660 நோட்​டு​கள் ரூ.200 மதிப்​பும் கொண்​ட​தாகும். இவ்​வாறு அந்த பதிலில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x