Published : 13 Aug 2025 07:04 AM
Last Updated : 13 Aug 2025 07:04 AM

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் வங்கியில் பட்டப்பகலில் 15 கோடி தங்கம், பணம் கொள்ளை

ஜபல்பூர்: மத்​தி​யபிரதேச மாநிலம் ஜபல்​பூர் அரு​கில் உள்ள ஒரு வங்​கி​யில் பட்​டப்​பகலில் ஆயுதமேந்​திய கொள்​ளை​யர்​கள் ரூ.14.8 கோடிக்​கும் அதிக மதிப்​புள்ள தங்​கம் மற்​றும் ரூ.5.7 லட்​சம் பணத்தை கொள்​ளை​யடித்​துச் சென்​றனர். மத்​திய பிரதேச மாநிலம் ஜபல்​பூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலை​வில் உள்ள கிடோலா பகு​தி​யில் இசாஃப் ஸ்மால் ஃபை​னான்ஸ் வங்கி கிளை இயங்கி வருகிறது.

இந்​நிலை​யில் நேற்று காலை 11 மணி​யள​வில் 6 கொள்​ளை​யர்​கள் 3 மோட்​டார் சைக்​கிள்​களில் இந்த வங்​கிக்கு வந்​தனர். இவர்​களில் 4 பேர் முகத்தை மறைப்​ப​தற்​காக ஹெல்​மெட் அணிந்து கொண்டு வங்​கிக்​குள் நுழைந்​துள்​ளனர். பிறகு துப்​பாக்கி முனை​யில் வங்கி ஊழியர்​களை மிரட்டி ரூ.14.8 கோடிக்​கும் அதிக மதிப்​புள்ள தங்​கம் மற்​றும் ரூ.5.7 லட்​சம் பணத்தை கொள்​ளை​யடித்​துக் கொண்டு சில நிமிடங்​களில் தப்​பிச் சென்று விட்​டனர்.

கொள்ளை நடந்த நேரத்​தில் மேலா​ளர் உட்பட வங்​கி​யில் 6 ஊழியர்​கள் இருந்​தனர். பண்​டிகை காலத்​துக்​காக வேலை நேரத்​தில் சமீபத்​திய மாற்​றங்​கள் காரண​மாக, அந்த நேரத்​தில் வங்​கி​யில் பாது​காப்பு காவலர் யாரும் பணி​யில் இல்​லை.

வங்கி ஊழியர்​களை சிறிது நேரம் கவனித்​துக் கொண்​டிருந்த கொள்​ளை​யர்​கள் பிறகு துப்​பாக்​கி​களை எடுத்து சுடப்​போவ​தாக மிரட்​டி​யுள்​ளனர். பிறகு ஊழியர்​களை கட்​டாயப்​படுத்தி வங்கி லாக்​கரில் 14.8 கிலோ தங்​கம் மற்​றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இச்​சம்​பவம் பற்றி அறிந்த கிதாவ்லி காவல் நிலைய போலீ​ஸார், மாவட்ட எல்​லைகளுக்கு 'சீல்' வைத்​து, அண்டை மாவட்​டங்​களுக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளனர். வங்கி மற்​றும் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை கைப்​பற்​றி, ஆய்வு செய்து வரு​கின்​றனர். கொள்​ளை​யர்​கள் விரை​வில் கைது செய்​யப்​படு​வார்​கள்​ என நம்​பிக்​கை தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x