Published : 12 Aug 2025 09:21 AM
Last Updated : 12 Aug 2025 09:21 AM

ஆதாரங்கள், உறுதிமொழி பத்திரம் கொடுங்கள்: ராகுலுக்கு 3 தேர்தல் அதிகாரிகள் மீண்டும் கடிதம்

புதுடெல்லி: ‘​வாக்கு திருட்​டு’ தொடர்​பாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்திக்கு 3 மாநில தலைமை தேர்​தல் அதிகாரி​கள் மீண்​டும் கடிதம் அனுப்பி உள்​ளனர். அதில், குற்​றச்​சாட்​டுக்​கான ஆதா​ரங்​களை சமர்ப்​பிக்க கேட்​டுக் கொண்டுள்ளனர்.

‘‘மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​யம் கூட்டு சேர்ந்து வாக்​கு​கள் திருடப்பட்​டுள்​ளன. கர்​நாட​கா​வில் உள்ள மகாதேவபுரா தொகு​தி​யிலும் வாக்​கு​கள் திருடப்​பட்​டுள்​ளன’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கடந்த வாரம் பகிரங்​க​மாக குற்​றம் சாட்​டி​னார்.

இதுதொடர்​பாக கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா மற்​றும் ஹரி​யானா மாநிலங்​களைச் சேர்ந்த தலைமை தேர்​தல் அதி​காரி​கள், ‘‘வாக்கு திருட்டு உண்மை என்​றால் சட்​டப்​படி உறு​தி​மொழி பத்​திரத்​தில் கையெழுத்​திட்டு ராகுல் காந்தி அளிக்க வேண்​டும். அல்​லது இந்த நாட்டு மக்​களிடம் மன்​னிப்பு கேட்க வேண்​டும்’’ என்று வலி​யுறுத்தி கடிதம் அனுப்​பினர்.

இந்​நிலை​யில், மகா​ராஷ்டி​ரா, கர்​நாட​கா, ஹரி​யானா ஆகிய 3 மாநில தலைமை தேர்​தல் அதி​காரி​கள் மீண்​டும் ராகுல் காந்​திக்கு நேற்​று​முன்​தினம் கடிதம் அனுப்பி உள்​ளனர்.

அதில், ஆதா​ரங்​கள், உறு​தி​மொழி பத்​திரம் ஆகிய​வற்றை கேட்​டுள்​ளனர். கடந்த 2024-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலின்போது மகாதேவபுரா தொகு​தி​யில் பெண் ஒரு​வர் 2 முறை வாக்​களித்​த​தாக ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யிருந்​தார். அந்​தப் பெண்​ணின் வாக்​காளர் அடை​யாள அட்​டையை வெளி​யிட்டு ஆதா​ர​மாக கூறி​னார்.

இதுகுறித்து கர்​நாடக தலைமை தேர்​தல் அதி​காரி வி.அன்​பு​கு​மார், ராகுல் காந்​திக்கு 2-வது முறை​யாக கடிதம் அனுப்​பி​னார். அதில், ‘‘நீங்​கள் கூறியபடி ஷகுன் ராணி என்ற அந்த பெண்​ணின் வாக்​காளர் அட்டை குறித்து தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

நீங்​கள் (ராகுல்) கூறியது போல் மக்​களவை தேர்​தலில் 2 முறை வாக்​களிக்​க​வில்​லை. ஒரு முறை​தான் வாக்​களித்​தேன் என்று அவர் கூறி​யுள்​ளார். நீங்​கள் பத்​திரி​கை​யாளர் சந்​திப்​பில் காட்​டிய அந்த பெண்​ணின் ஆவணம் (டிக் அடித்து காட்​டப்​பட்​டது), தேர்​தல் அதி​காரி​யால் வழங்​கப்​பட​வில்​லை’’ என்று திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளார்.

தேர்​தல் அதி​காரி​கள் கூறும்​போது, ‘‘ஷகுன் ராணி​யின் பெயரை தேர்​தல் ஆணை​யம் வழங்​கியது போல் தனி பட்​டியலில் ராகுல் காட்​டி​யுள்​ளார். அது சித்​தரிக்​கப்​பட்ட ஆவணம். மகா​ராஷ்டிர தலைமை தேர்​தல் அதி​காரி எஸ்​.சொக்​கலிங்​கம்​தான் அவருக்கு கடிதம் கடிதம் அனுப்​பி​னார்.

கடந்த 7-ம் தேதி ராகுல் காந்​திக்கு அனுப்​பிய அந்​தக் கடிதத்​தில், ‘‘குற்​றச்​சாட்​டுக்​கான ஆதா​ரங்​களை சமர்ப்​பிக்க வேண்​டும். உண்​மை​தான் என்று கூறு​வதற்கு உறு​தி​மொழி பத்​திரத்தை கையெழுத்​திட்டு சமர்ப்​பிக்க வேண்​டும்’’ என்று வலி​யுறுத்தி இருந்​தார். அதற்கு 10 நாட்​கள் அவகாச​மும் தேர்​தல் அதி​காரி சொக்​கலிங்​கம் வழங்கி உள்​ளார்.

ஹரி​யானா தலைமை தேர்​தல் அதி​காரி னி​வாசனும், ராகுல் காந்தி பதில் அளிக்க 10 நாட்​கள் அவகாசம் வழங்கி உள்​ளார். போலி ஆவணங்​களை காட்டி குற்​றம் சாட்​டி​னால், அதற்​கான சட்​டப்​பூர்வ நடவடிக்​கையை ராகுல் காந்தி எதிர்​கொள்ள வேண்டியிருக்கும்.

பிஎன்​எஸ் சட்​டம் 337-வது பிரி​வின் கீழ் எப்​ஐஆர் பதிவு செய்து ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கவாய்ப்புள்​ளது. போலி ஆவணங்​களை காட்​டியது நிரூபிக்​கப்​பட்​டால்​ 7 ஆண்​டு வரை சிறை தண்​டனை கிடைக்​க வாய்ப்​புள்​ளது என்​று டெல்​லி வட்​டாரங்​கள்​ தெரிவிக்​கின்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x