Published : 12 Aug 2025 07:21 AM
Last Updated : 12 Aug 2025 07:21 AM

3.5 லட்சம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன: மக்களவையில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த 2003 முதல் 3.5 லட்​சம் ஓலைச்​சுவடிகள் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டுள்​ள​தாக மக்​களவை​யில் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

மக்​களவை​யில் உறுப்​பினர் ஒரு​வர் கேட்​ட கேள்விக்கு மத்​திய கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் கஜேந்​திர சிங் செகாவத் அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: ‘ஓலைச்​சுவடி பாரம்​பரி​யத்​தின் மூலம் இந்​தி​யா​வின் அறிவு மரபை மீட்​பது' என்ற தலைப்​பில் முதல் சர்வ​தேச ஓலைச்​சுவடிகள் பாரம்​பரிய மாநாடு மத்​திய அரசு சார்​பில் வரும் செப்​டம்​பர் மாதம் நடை​பெற உள்​ளது.

கடந்த 1893-ம் ஆண்டு செப்​டம்​பர் 11-ம் தேதி அமெரிக்​கா​வின் சிகாகோ நகரில் நடை​பெற்ற உலக மதங்​களின் மாநாடு நடை​பெற்றது. இதில் சுவாமி விவே​கானந்​தர் உரை​யாற்​றி​னார். வரலாற்று சிறப்​புமிக்க இந்த உரை​யின் 132-வது ஆண்டு நிறைவை நினை​வு​கூரும் வகை​யில் இந்த மாநாடு நடை​பெற உள்​ளது.

கடந்த 2003 முதல் 3.5 லட்​சம் ஓலைச்​சுவடிகள் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டுள்​ளன. இது​வரை 92 ஓலைச்​சுவடி பாது​காப்பு மையங்​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன. கூடு​தலாக 93 ஓலைச்​சுவடி வள மையங்​கள் உள்​ளன. அவற்​றில் 37 செயல்​பாட்​டில் உள்​ளன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x