Published : 12 Aug 2025 07:13 AM
Last Updated : 12 Aug 2025 07:13 AM

அணு ஆயுதம் உள்ள பொறுப்பற்ற நாடு பாகிஸ்தான்: அசிம் முனீர் அச்சுறுத்தலுக்கு இந்தியா விமர்சனம்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கைக்​குப் பிறகு பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனீர் 2-வது முறை​யாக அமெரிக்கா சென்​றுள்​ளார். புளோரிடா மாகாணம் டம்பா நகரில், தொழில​திபரும் கவுரவ தூதரு​மான அட்​னன் ஆசாத் அசிம் முனீருக்கு நேற்று முன்​தினம் இரவு விருந்து அளித்​தார்.

அந்நிகழ்ச்​சி​யில் முனீர் பேசி​ய​தாவது: சிந்து நதி நீர் இந்​தி​யா​வின் சொத்து அல்ல. அந்த நதியி​லிருந்து பாகிஸ்​தானுக்கு வரும் தண்​ணீரை தடுத்து நிறுத்த இந்​தியா அணை கட்​டி​னால், அதை ஏவு​கணை​கள் மூலம் தகர்ப்​போம். நாங்​கள் ஒரு அணு ஆயுத நாடு. வருங்​காலத்​தில் இந்​தி​யா​வுடன் போர் மூண்​டு, அதில் நாங்​கள் வீழ்ச்சி அடைகிறோம் என்று நினைத்​தால், உலகின் பாதி​யை​யும் அழித்​து​விடு​வோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இதுகுறித்து இந்​திய வெளி​யுறவுத் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அசிம் முனீர் தெரி​வித்த கருத்தை கவனத்​தில் கொண்​டுள்​ளோம். அணு ஆயுத அச்​சுறுத்​தல் என்​பது பாகிஸ்​தானின் வழக்​க​மான தந்​திரம். அணு ஆயுத மிரட்​டல்​களுக்கு இந்​தியா ஒரு​போதும் அடிபணி​யாது என்​பதை இந்​தியா ஏற்​கெனவே தெளிவுபடுத்​தி​யுள்​ளது.

அமெரிக்க மண்​ணில் இருந்​த​படி, அசிம் முனீர் அணு ஆயுத மிரட்​டல் விடுத்​திருப்​பது, பாகிஸ்​தான் என்​பது அணு ஆயுதங்​களைக் கொண்ட பொறுப்​பற்ற நாடு என்​ப​தைக் காட்​டு​கிறது. அந்த நாட்​டின் அணு ஆயுதங்​கள் அரசு​சாரா அமைப்​பு​களின் (தீ​விர​வாத) கைகளில் கிடைப்​ப​தற்​கான ஆபத்து உள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

அசிம் முனீர் கருத்தை சமூக ஊடக​வாசிகள் கடுமை​யாக விமர்​சித்து வரு​கின்​றனர். “முனீர் கருத்​தில் உள்ள ஓர் உண்மை என்​ன வென்​றால், இந்​தியா மெர்​சிடிஸ் என்​றும் பாகிஸ்​தான் குப்பை லாரி என்​றும் கூறி​யிருப்​பது​தான். மற்​றவை எல்​லாம் மாயை’’ என ஒரு​வர் பதி​விட்​டுள்​ளார். மற்​றொரு​வர், “இந்​தியா என்​பது முழுக்க முழுக்க ஏவு​கணை​களால் நேரடி​யாகவே கொல்​லும் வல்​லமை கொண்​ட ஒரு மிரு​கம்​. அது உங்​களை முற்​றி​லும்​ நசுக்​கி​விடும்​’’ என பதிவிட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x