Last Updated : 11 Aug, 2025 09:31 AM

3  

Published : 11 Aug 2025 09:31 AM
Last Updated : 11 Aug 2025 09:31 AM

தேர்தல் ஆணையம் நோக்கி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று பிரம்மாண்ட பேரணி

கோப்புப் படம்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்துகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். காலை 11.30 மணியளவில் இந்தப் பேரணி நடைபெறவிருக்கிறது.

இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (யுபிடி) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆனால், இந்தப் பேரணிக்கு டெல்லி போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், இந்தப் பேரணிக்காக இண்டியா கூட்டணி சார்பில் முறையாக அனுமதி கோரியும் விண்ணப்பிக்கப் படவில்லை என டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருபினும், இண்டியா கூட்டணி இந்தப் பேரணிக்கு தயாராகி வருவதாகவும் பேரணியில் ஆங்கிலம், இந்தி, தமிழ், வங்காளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பிஹாரில் நடைபெறு சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்கு திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதாகைகள் ஏந்திச் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மகா​ராஷ்டி​ரா, கர்​நாட​கா, ஹரி​யானா போன்ற மாநிலங்​களில் ஏராள​மான வாக்​காளர்​கள் போலி​யாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். ஏராள​மான வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வரும், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி குற்​றம் சாட்டி இருந்தார்.

மேலும், நேற்று அவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில், “வாக்கு திருட்டு என்​பது ஒரு​வருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்​படை நோக்​கத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதலாகும். தெளி​வான வாக்​காளர் பட்​டியல் என்​பது​தான், நேர்​மை​யான சுதந்​திர​மான தேர்​தலை உறுதி செய்​யும். தேர்​தல் ஆணை​யத்​திடம் நாங்​கள் வைக்​கும் கோரிக்கை எல்​லாம் தெளி​வாக உள்​ளது. தேர்​தல் ஆணை​யம் வெளிப்​படை​யாக செயல்பட வேண்​டும்.

மின்​னணு வாக்​காளர் பட்​டியலை வெளி​யிட வேண்​டும். அப்​போது​தான் நாட்டு மக்​களும் அரசி​யல் கட்​சிகளும் அதை ஆய்வு செய்ய முடி​யும். எங்​களு​டைய இந்த கோரிக்​கையை வலி​யுறுத்தி பிரச்​சா​ரம் தொடங்​கு​கிறோம். அதற்​காக ‘http://votechori.in/ecdemand’ என்ற புதிய இணை​யதளத்தை தொடங்கி வைக்​கிறோம். அத்​துடன் 96500 03420 என்ற செல்​போன் எண்​ணை​யும் வெளி​யிடு​கிறோம். இணை​யதளத்​தில்பொது​மக்​கள் தங்​கள் கருத்​துகளைக் கூறி, பிரச்​சா​ரத்​தில் பங்​கேற்க வேண்​டும். செல்​போனில் மிஸ்டு கால் கொடுத்து பிரச்​சா​ரத்​தில் இணை​ய​லாம்.” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று பிரம்மாண்டப் பேரணி நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x