Published : 11 Aug 2025 06:47 AM
Last Updated : 11 Aug 2025 06:47 AM

பிஹார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை வெளியிட அவசியமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர்​களை தனி​யாக வெளி​யிட அவசி​யமில்​லை. இதை வலி​யுறுத்​தும் வகை​யில் எந்த சட்​ட​வி​தி​யும் கிடை​யாது என்று உச்ச நீதி​மன்​றத்​தில் தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி அண்​மை​யில் நடை​பெற்​றது. கடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 7.24 கோடி பேர் இடம் பெற்​றுள்​ளனர். 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன.

பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணிக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டு இருக்​கிறது. இந்த வழக்​கில் ஏடிஆர் என்ற தன்​னார்வ தொண்டு அமைப்பு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் அண்​மை​யில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், ‘‘பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன. அவர்​களின் பெயர்​கள் அடங்​கிய தனி பட்​டியலை வெளி​யிட வேண்​டும்’’ என்று கோரப்​பட்​டது. இதுகுறித்து விளக்​கம் அளிக்​கும்​படி தேர்​தல் ஆணை​யத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதன்​படி தேர்​தல் ஆணை​யம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்டு இருக்​கிறது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர்​களை தனி​யாக வெளி​யிட அவசி​யமில்​லை. இதை வலி​யுறுத்​தும் வகை​யில் எந்த சட்​ட​வி​தி​யும் கிடை​யாது வரைவு வாக்​காளர் பட்​டியலில் பெயர் நீக்​கம் செய்​யப்​பட்​ட​வர்​கள், தேவை​யான ஆதா​ரங்​களு​டன் விண்​ணப்​பிக்​கலாம். உரிய விசா​ரணை, முறை​யான நோட்​டீஸ் வழங்​கப்​ப​டா​மல் யாருடைய பெயரும் பட்​டியலில் இருந்து நீக்​கப்​ப​டாது. பெயர் நீக்​கப்​பட்ட அனை​வருக்​கும் போதிய கால அவகாசம் வழங்​கப்​படும்.

தேர்​தல் ஆணை​யத்​தின் தரப்​பில் 2.5 லட்​சம் தன்​னார்​வலர்​கள் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு உள்​ளனர். அவர்​களில் பெரும்​பாலானோர் பிஹார் அரசு அலு​வலர்​கள் ஆவர். பிஹார் வாக்​காளர்​களுக்கு தேவை​யான உதவி​களை அவர்​கள் செய்து கொடுத்து வரு​கின்​றனர். பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி தொடர்​பாக நாளிதழ்​களில் 246-க்​கும் மேற்​பட்ட விளம்​பரங்​கள் வெளி​யிடப்​பட்டு உள்​ளன. அதோடு சமூக வலை​தளங்​கள் வாயி​லாக​வும் மக்​களிடையே விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு தேர்​தல் ஆணை​யம் தெரிவித்துள்​ளது.

இந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் வரும் 12-ம் தேதி மீண்​டும் வி​சா​ரணைக்கு வரு​கிறது. அப்​போது உச்ச நீதி​மன்​றம் முக்​கிய உத்​தர​வு​களை பிறப்​பிக்​கலாம்​ என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x