Published : 10 Aug 2025 09:02 AM
Last Updated : 10 Aug 2025 09:02 AM

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நேருதான் தொடங்கினார்: ராகுல் காந்திக்கு அமித் ஷா பதில்

சீதாமரி: வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நேருதான் தொடங்கினார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் பிஹாரின் சீதாமரி நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

வாக்கு வங்கி அரசி​யலை ராகுல் காந்தி நிறுத்த வேண்​டும். வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி முதல்​முறை​யாக மேற்​கொள்​ளப்​பட​வில்​லை. உங்​களது தாத்தா நேருதான் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணியை முதல்​முறை​யாக மேற்​கொண்​டார்.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் கூட்​டணி தோல்வி அடைவது உறு​தி. இதன்​காரண​மாக இப்​போதே ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் பொய் குற்​றச்​சாட்​டு​களை சுமத்தி வரு​கின்​றனர்.

தேர்​தல் ஆணை​யம் சார்​பில் அண்​மை​யில் வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதுதொடர்​பாக காங்​கிரஸ் தரப்​பிலோ, ராஷ்டிரிய ஜனதா தளம் தரப்​பிலோ இது​வரை ஆட்​சேபம் எழுப்​பப்​பட​வில்​லை. இந்​திய மண்​ணில் பிறந்​தவர்​கள் மட்​டுமே தேர்​தலில் வாக்​களிக்க முடி​யும்.

லாலு​வும் அவரது ஆதர​வாளர்​களும் ஊடுரு​வல்​காரர்​களின் வாக்​கு​களை விரும்​பு​கின்​றனர். இதன்​ காரண​மாகவே வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணிக்கு அவர்​கள் எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர். வாக்​காளர் பட்​டியலில் இருந்து ஊடுரு​வல்​காரர்​கள் நீக்​கப்​படு​வார்​கள். பிரதமர் மோடி​யின் ஆட்​சி​யில் தீவிர​வா​தி​களுக்கு தகுந்த பாடம் கற்​பிக்​கப்​படு​கிறது.

பிஹாரில் மிக நீண்ட காலம் லாலு பிர​சாத் ஆட்சி நடத்​தி​னார். அப்​போது கொலை, கொள்​ளை, ஆள்​கடத்​தல், ரவுடிகளின் ஆதிக்​கம் நிறைந்​திருந்​தது. தற்​போது தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சி​யில் மாநிலத்​தின் சட்​டம் ஒழுங்கு மேம்​பட்​டிருக்​கிறது. ஒட்​டுமொத்த பிஹாரும் வளர்ச்​சிப் பாதை​யில் பயணம் செய்​கிறது. பிஹாரின் சீதாமரி​யில் ஜானகி தேவிக்கு பிரம்​மாண்ட கோயில் கட்ட அடிக்​கல் நாட்​டப்​பட்டு உள்​ளது. 67 ஏக்​கர் பரப்​பில் ரூ.900 கோடி​யில் இந்த கோயில்​ கட்​டப்​படும்​. இவ்​வாறு அமித்​ ஷா பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x