Published : 10 Aug 2025 07:13 AM
Last Updated : 10 Aug 2025 07:13 AM

குழந்தைகள், பிரம்ம குமாரிகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் நடைபெற்ற ரக்‌ஷா பந்தன் நிகழ்ச்சியில் அவருக்கு பள்ளிக் குழந்தைகள் ராக்கி கயிறு கட்டினர். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடினார். படம்: பிடிஐ

புதுடெல்லி: சகோதர பாசத்தை வெளிப்​படுத்​தும் ரக்‌ஷா பந்​தன் விழா நாடு முழு​வதும் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இவ்​விழாவை முன்​னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் மக்​களுக்கு வாழ்த்​துகளை தெரி​வித்​துள்​ளார்.

மேலும் பிரதமர் மோடி​யின் இல்​லத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அவருக்கு பள்​ளிக் குழந்​தைகள் ராக்கி கயிறு கட்​டினர். பின்​னர் பள்ளி குழந்​தைகளு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார். இதையடுத்​து, பிரம்ம குமாரி​கள் அமைப்​பினரும் பிரதமர் மோடியை அவரது இல்​லத்​தில் சந்​தித்து ராக்கி கயிறு கட்டினர். இது தொடர்​பான வீடியோ மற்​றும் புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாக பகிரப்​பட்டு வரு​கின்​றன.

மத்​திய அமைச்​சர்​கள் வாழ்த்து: மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “சகோதர சகோ​தரி​களுக்கு இடையி​லான அன்​பு, நம்​பிக்கை மற்​றும் பாது​காப்​புக்​கான அர்ப்​பணிப்பு ஆகிய​வற்​றின் பிரிக்க முடி​யாத பிணைப்பை வெளிப்​படுத்​தும் ரக்‌ஷா பந்​தன் விழாவை முன்​னிட்டு நாட்டு மக்​களுக்கு இதயம் கணிந்த வாழ்த்​துகள்’’ என பதி​விட்​டுள்​ளார்.

பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தனது எக்ஸ் பக்​கத்​தில், “ரக்‌ஷா பந்​தன் விழாவுக்​காக அனை​வருக்​கும் இதயம் கணிந்த வாழ்த்​துகள். நமக்​குள் இருக்​கும் பாது​காப்பு உணர்வை இந்த விழா மேலும் வலுப்​படுத்த வேண்​டும்​’’ என பதி​விட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x