Published : 10 Aug 2025 07:07 AM
Last Updated : 10 Aug 2025 07:07 AM

இந்தியா யாருக்கும் அடிபணியாது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி

புதுடெல்லி: இந்​தியா யாருக்​கும் அடிபணி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​தார்.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்​கா​வின் புதிய அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்​றார். அப்​போது முதல் பல்​வேறு நாடு​கள் மீது அதிக அளவி​லான வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்து வரு​கிறார். தற்​போது இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீத வரியை விதித்​துள்​ளார். இதற்கு இந்​தியா கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது.

ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வரி​யும், அபராத வரி​யும் விதித்து வரு​கிறார். இதனால் சர்​வ​தேச அளவில் தொழில், வர்த்தக துறை​யினர் மத்​தி​யில் பெரும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், இந்​தி​யா-அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்​பந்த பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்ற மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் கூறிய​தாவது: இந்​தியா யாருக்​கும் அடிபணி​யாது. கரோனா நெருக்​கடியை நாடு ஒரு வாய்ப்​பாக மாற்றி தகவல் தொழில்​நுட்​பத்​துறை​யில் ஆயிரக்​கணக்​கான வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கியது. சவாலான காலங்​களில் இந்​தியா எப்​போதும் வெற்றி பெறும். உலகெங்​கிலும் உள்ள நாடு​கள் மறுசீரமைக்​கப்​பட்டு புதிய வர்த்தக கூட்​டாளி​களைத் தேடு​கின்​றன.

இந்​தியா கடந்த ஆண்​டை​விட இந்த ஆண்டு அதிக ஏற்​றும​தி​களைச் செய்​யும் என்று நான் உறு​தி​யாக நம்​பு​கிறேன். இன்று இந்​தியா வலு​வான​தாக இருக்​கிறது. அதிக மரி​யாதைக்​குரியது. புதிய வர்த்தக ஏற்​பாடு​களை இந்​தியா உரு​வாக்​கும். ஐக்​கிய அரபு அமீரகம், மொரீஷியஸ், ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, ஐரோப்​பிய ஒன்​றி​யம், சிலி, பெரு, நியூசிலாந்து என பல நாடு​கள் உள்பட பலதரப்​பட்ட கூட்​டாளி​களு​டன் இந்​தியா வர்த்தக ஒப்​பந்​தங்​களைத் தொடர்​கிறது. வர்த்தக ஒப்​பந்​தங்​களை​ இறுதி செய்தும் வரு​கிறது.

இந்​தி​யாவை ‘‘இறந்து போன பொருளா​தா​ரம்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி​யிருந்​தார். அதற்கு மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி விமர்​சித்​திருந்​தார். இந்​திய பொருளா​தா​ரம் குறித்து எதிர்க்​கட்​சித் தலை​வர் கிண்​டல் செய்​வது வெட்​கக் கேடான விஷ​யம். அதற்​காக நான் அவரை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறேன்.

இந்​தி​யா​வின் பொருளா​தா​ரம் பற்றி பேசிய ராகுல் காந்​தியை இந்த நாடு ஒரு​போதும் மன்​னிக்​காது. நாட்​டின் பணம், அந்​நிய செலா​வணி​யின் இருப்​பு, பங்​குச் சந்​தைகள் அனைத்​தும் வலு​வான நிலை​யிலேயே உள்​ளன. பிற வளர்ந்து வரும் நாடு​களின் பொருளா​தா​ரத்​துடன் ஒப்​பிடு​கை​யில், இந்​தி​யா​வின் பணவீக்​கம் உலகிலேயே மிகக் குறை​வாகத்​தான் இருக்​கிறது. இவ்​வாறு அமைச்​சர்​ பியூஷ் கோயல்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x