Published : 09 Aug 2025 08:28 AM
Last Updated : 09 Aug 2025 08:28 AM

இந்தியாவுக்கு வர ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிரதமர் நரேந்​திர மோடி​யும் நேற்று தொலைபேசி​யில் முக்​கிய ஆலோ​சனை நடத்தினர். அமெரிக்​கா​வின் வரி விதிப்பு தொடர்​பாக இரு தலை​வர்​களும் விவா​தித்​த​தாக தெரி​கிறது.

இந்தியாவுக்கு விதித்தது போலவே தென்​அமெரிக்க நாடான பிரேசிலுக்​கும் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அரசு அமல் செய்திருக்​கிறது.

இந்த சூழலில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்​வா, பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று முன்​தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி​னார். இரு தலை​வர்​களும் சுமார் ஒரு மணி நேரத்​துக்​கும் மேலாக முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது அமெரிக்​கா​வின் வரி விதிப்பு விவ​காரம் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x