Published : 08 Aug 2025 05:50 PM
Last Updated : 08 Aug 2025 05:50 PM
புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஆகஸ்ட் 8) மக்களவையில் வருமான வரி மசோதா 2025-ஐ திரும்பப் பெற்றார். மேலும், தேர்வுக் குழு பரிந்துரைத்த மாற்றங்களைச் சேர்த்த பிறகு அரசு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ பைஜயந்த் பாண்டா தலைமையிலான 31 உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழு, கடந்த பிப்ரவரி 13 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதாவில் பல மாற்றங்களை பரிந்துரைத்திருந்தது. இந்தக் குழு 4,500 பக்கங்களில் புதிய வருமான வரி மசோதா 2025-ன் மீது 285 பரிந்துரைகளை வழங்கியது. இந்தக் குழு அளித்த பரிந்துரைகளை உள்ளடக்கிய வருமான வரி மசோதாவின் புதிய பதிப்பு ஆகஸ்ட் 11 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மசோதாவின் பல பதிப்புகளால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்கவும், அனைத்து மாற்றங்களும் சேர்க்கப்பட்ட தெளிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வழங்கவும், புதிய வருமான வரி மசோதா ஆகஸ்டு 11-ஆம் தேதி மக்களவையில் பரிசீலனைக்கு அறிமுகப்படுத்தப்படும்
புதிய வருமான வரி சட்டத்தில் மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெயர் குறிப்பிடப்படாத நன்கொடைகளுக்கு தொடர்ந்து வரி விலக்கு அளிக்க குழு பரிந்துரைத்திருந்தது. மேலும், வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குப் பிறகும் எந்த அபராதக் கட்டணமும் செலுத்தாமல் டிடிஎஸ் பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. தற்போதுள்ள மசோதாவை எளிமைப்படுத்தவும், புரிந்துகொள்வதை எளிதாக்கவும் வேண்டுமென குழு பரிந்துரைத்துள்ளது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT