Published : 08 Aug 2025 08:18 AM
Last Updated : 08 Aug 2025 08:18 AM

கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் கமல்ஹாசன் கோரிக்கை

புதுடெல்லி: மாநிலங்​களவை உறுப்​பின​ராக பதவி​யேற்​றபின், பிரதமர் மோடியை நேற்று முதல் முறை​யாக சந்​தித்த மக்​கள் நீதி மய்​யம் (மநீம) தலை​வர் கமல்​ஹாசன், கீழடி ஆய்வு அறிக்​கையை அங்​கீகரிக்க வேண்​டும் என்​பது உட்பட பல கோரிக்​கைகளை வலியுறுத்தினார்.

மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வ​ரான கமல்​ஹாசன் மாநிலங்​களவை உறுப்​பின​ராக கடந்த ஜூலை 25-ம் தேதி பொறுப்​பேற்றார். அவர் பிரதமர் மோடியை டெல்​லி​யில் நேற்று சந்​தித்​தார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ‘பிரதமர் நரேந்​திர மோடியை மரி​யாதை நிமித்​த​மாக சந்​தித்​தேன். ஒரு கலைஞ​னாக​வும், தமிழ்​நாட்​டின் பிர​தி​நி​தி​யாக​வும் அவரிடம் சில கோரிக்​கைகளைத் தெரி​வித்​திருக்​கிறேன். அவற்​றுள் தலையாயது கீழடி.

தமிழின் தொன்​மை​யை, தமிழ் நாகரி​கத்​தின் பெரு​மையை உலகிற்கு உரக்​கச் சொல்​லும் தமிழர்​களின் முன்​னெடுப்​பு​களுக்கு உறுதுணை​யாக இருக்க வேண்​டும் என்று கேட்​டுக்​கொண்​டேன். இவ்​வாறு கமல்​ஹாசன் தெரி​வித்​துள்​ளார்.

கீழடி​யில் நடத்​தப்​பட்ட ஆய்​வின் அறிக்​கை, மத்​திய தொல்​லியல் துறை​யிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால் இந்த ஆய்வறிக்கையை அங்​கீகரிக்​காமல், திருத்​தம் கோரி மத்​திய அரசு திருப்பி அனுப்​பியது. இந்​நிலை​யில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்​தித்த, மாநிலங்​களவை உறுப்​பினர் கமல்​ஹாசன் கீழடி ஆய்​வறிக்​கையை மத்​திய அரசு அங்​கீகரிக்க வேண்​டும் என கோரிக்கை விடுத்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x