Published : 08 Aug 2025 06:44 AM
Last Updated : 08 Aug 2025 06:44 AM

செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணை தலை​வர் தேர்​தல் வாக்கெடுப்பு

புதுடெல்லி: நாட்​டின் 14-வது குடியரசு துணை தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜி​னாமா செய்​தார். இதைத் தொடர்ந்து தலைமை தேர்​தல் ஆணை​யம் நேற்று வெளி​யிட்ட அறிவிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலுக்​கான வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்​வதற்​கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும்.

ஆகஸ்ட் 22-ம் தேதி வேட்பு மனுக்​கள் மீதான பரிசீலனை நடை​பெறும். வேட்​பு மனுக்​களை திரும்​பப் பெறு​வதற்​கான கடைசி தேதி ஆகஸ்ட் 25 ஆகும். செப்​டம்​பர் 9-ம் தேதி நாடாளு​மன்ற வளாகத்​தில் வாக்​கெடுப்பு நடை​பெறும். மாநிலங்​களவை பொதுச் செய​லா​ளர் பி.சி. மோடி தேர்​தல் அதி​காரி​யாக செயல்​படு​வார். இவ்​வாறு அறிவிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x