Last Updated : 07 Aug, 2025 07:36 AM

1  

Published : 07 Aug 2025 07:36 AM
Last Updated : 07 Aug 2025 07:36 AM

ஆயுள் தண்டனை கைதி பாபா ராம் ரஹீமுக்கு மீண்டும் பரோல்: 8 ஆண்டுகளில் 375 நாள் சிறையிலிருந்து வெளியே வந்ததால் சர்ச்சை

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் சிங் எனும் பாபா ராம் ரஹீமுக்கு மீண்டும் 40 நாள் பரோல் கிடைத்துள்ளது. இவர் கடந்த 8 வருடங்களில் 375 நாள் வெளியில் வந்து சென்றது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பிரபல துறவியாக இருப்பவர் குர்மீத் சிங் எனும் பாபா ராம் ரஹீம். இவர் தனது டேரா சச்சா சவுதா மடத்தின் ஹரியானா ஆசிரமத்தில் 2 இளம் பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவானது. இதில் ராம் ரஹீம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, கடந்த 2017-ல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு 2019-ல் பத்திரிகையாளர் ராமச்சந்திர சத்ரபதி கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஹரியானாவின் ரோத்​தக், சுனரியா சிறை​யில், 2017 முதல் பாபா ராம் ரஹீம் இருந்து வரு​கிறார். இவருக்கு நேற்று முன்​தினம் மீண்​டும் 40 நாள் பரோல் கிடைத்​துள்​ளது. கடந்த 3 மாதங்​களில் இவர் பரோலில் வரு​வது இது 2-வது முறை​யாகும். மேலும் 8 ஆண்டு சிறை வாழ்க்​கை​யில் இவர் இது​வரை 18 முறை பரோல் பெற்​றது சர்ச்​சை​யாகி வரு​கிறது. 18 முறை பரோல் காரண​மாக இவர் ஒரு வருடத்​துக்​கும் மேலாக சிறைக்கு வெளி​யில் இருந்​துள்​ளார்.

இவருக்கு தொடக்​கத்​தில் 5 ஆண்​டு​கள் வரை மற்ற கைதி​களை போல ஒன்று அல்​லது இரண்டு முறை பரோல் கிடைத்​தது. ஆனால் ஹரி​யானா அரசு மேற்​கொண்ட சட்​டத்​திருத்​தம் காரண​மாக 2022, பிப்​ர​வரி 7 முதல் ஒவ்​வொரு ஆண்​டும் சராசரி​யாக 91 நாட்​கள் பரோல் கிடைத்து வரு​கிறது. ஹரி​யா​னா​வில் இவரை போல ஆயுள் தண்​டனை கைதி​கள் 2,824 பேர் உள்​ளனர். ஆனால் அவர்​களில் பெரும்​பாலானோருக்​கு, ராம் ரஹீமை போல் இவ்​வளவு பரோல்​கள் கிடைப்​ப​தில்லை எனப் புகார் நில​வு​கிறது.

குஜ​ராத்​தின் பில்​கிஸ் பானு வழக்கை தவிர்த்​து, பாபா ராம் ரஹீ​முக்கு கிடைத்த பரோல், மிகப்​பெரிய சாதனை​யாக கருதப்​படு​கிறது. கடந்த 2022 டிசம்​பரில் உச்ச நீதி​மன்​றத்​தில் பில்​கிஸ் பானு பிர​மாணப் பத்​திரம் அளித்​திருந்​தார். அதில், தனக்கு எதி​ராக குற்​றம் சாட்​டப்​பட்ட 11 பேரில், 10 பேர் தண்​டனை பெற்ற பிறகு ஆயிரம் நாட்​கள் பரோல்​ மற்​றும்​ விடு​முறை எடுத்​துள்​ள​தாக கூறி​யிருந்​​தார்​.

ஆயுத வழக்​கில்​ சிக்​கிய ​பாலிவுட்​ நட்​சத்​திரம்​ சஞ்​சய்​ தத்​, ஜெஸி​கா லால்​ கொலை வழக்​கில்​ ஆயுள்​ தண்​டனை பெற்​ற மனு சர்​​மா ஆகியோ​ரும்​ பரோல்​கள்​ பெற்​ற​தில்​ சர்​ச்​சை​யில்​ சிக்​கினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x