Published : 15 Aug 2014 10:00 AM
Last Updated : 15 Aug 2014 10:00 AM
சேது சமுத்திர கால்வாய் திட்டத்துக்காக ராமர் பாலத்தை உடைக்கமாட்டோம், இதற்கு மாற்றாக நான்கு பாதைகள் உள்ளன என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இது குறித்து மக்களவையில் வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் வருமாறு:
‘சேதுசமுத்திர கால்வாய் திட்டத்துக்காக ராமர் பாலத்தை உடைக்க மாட்டோம். ராமர் பாலத்துக்கு மாற்றாக நான்கு பாதைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவற்றை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் விரிவாகப் பேச இயலாது’ எனத் தெரிவித்தார்.
இது பற்றி தி இந்துவிடம் பாஜக மக்களவை உறுப்பினர் யோகி. அதித்யநாத் கூறியதாவது: ‘ராமர் பாலத்தை உடைத்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சி செய்தது.
நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத் தேவையான தோரியம் தாது அதை சுற்றி இருப்பது பற்றியும் அவர்கள் கவலை கொள்ளவில்லை. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் கட்கரி வெளியிட்ட அறிவிப்பை வரவேற்கிறோம்’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT