Published : 06 Aug 2025 06:53 AM
Last Updated : 06 Aug 2025 06:53 AM

ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தில் எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்​தஸ்து வழங்க வகை செய்​யும் சட்​டப்​பிரிவு 370 நீக்​கப்​பட்​டதன் 6-ம் ஆண்டு விழாவையொட்டி நாடாளு​மன்ற வளாகத்​தில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி கட்​சி​யைச் சேர்ந்த எம்​.பி.க்​கள் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதில் கலந்து கொண்ட பாஜக மற்​றும் அதன் கூட்​டணி கட்​சிகளான தெலுங்கு தேசம், ஐக்​கிய ஜனதாதளம் மற்​றும் பிற கட்​சிகளின் நாடாளுமன்ற உறுப்​பினர்​கள் பிரதமர் மோடி​யின் வலு​வான தலை​மையை பாராட்​டினர். ஆபரேஷன் சிந்​தூர் மற்​றும் ஆபரேஷன் மகாதேவ் வெற்​றிக்​காக பிரதமர் மோடிக்கு மாலை அணி​வித்து பாராட்​டு​களை தெரி​வித்​தனர்.

பாது​காப்பு படை​யினரை பாராட்டி இந்த கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. அதில், ராணுவ வீரர்​களின் துணிச்​சல் நமது தேசத்​தைப் பாது​காப்​ப​தில் அவர்​களின் அசைக்க முடி​யாத அர்ப்​பணிப்பை எடுத்​துக்​காட்​டு​கிறது. பஹல்​காம் தீவிர​வாதத் தாக்குதலில் உயிர் இழந்​தவர்​களுக்கு எங்​கள் ஆழ்ந்த இரங்​கலை​யும் மரி​யாதையை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறோம் என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசி​ய​தாவது: எதிர்க்​கட்​சிகள் அரசி​யல் சாசனத்தை பற்றி பேசுகின்​றன. ஆனால், காஷ்மீரில் அதனை அமல்​படுத்த எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை குறித்த விவாதத்​துக்கு அழுத்​தம் கொடுத்ததன் மூலம் எதிர்க்​கட்​சிகள் தவறான கணக்கை போட்​டு​விட்​டனர். இந்த விவாதத்​தில் எதிர்க்​கட்​சிகள் தோற்​கடிக்​கப்பட்டுவிட்டன என்​பதே உண்​மை. இதற்​காக அவர்​கள் வருத்​தப்பட வேண்​டும். இவ்​வாறு பிரதமர்​ நரேந்திர மோடி பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x