Published : 06 Aug 2025 07:32 AM
Last Updated : 06 Aug 2025 07:32 AM

1971-ல் பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கிய அமெரிக்கா: இந்திய ராணுவத்தின் பதிவு வைரலாக பரவுகிறது

புதுடெல்லி: ​பாகிஸ்​தானுக்கு அமெரிக்கா ஆயுதங்​களை வழங்​கியது தொடர்​பாக இந்​திய ராணுவம் வெளி​யிட்ட நாளிதழ் பதிவு சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது. கடந்த 1971-ம் ஆண்டு டிசம்​பரில் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் மூண்டது. இந்த போரில் இந்​தியா அபார வெற்றி பெற்​றது.

இதன்​காரண​மாக பாகிஸ்​தானில் இருந்து வங்​கதேசம் விடு​தலை அடைந்து தனி நாடாக உதய​மானது. கடந்த 1971-ம் ஆண்டு போருக்கு முன்​பாக பாகிஸ்​தானுக்கு தேவை​யான ஆயுதங்​களை அமெரிக்கா வழங்​கியது. இதுதொடர்​பாக கடந்த 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி வெளி​யான நாளிதழ் பதிவை இந்​திய ராணுவத்​தின் கிழக்கு பிராந்​திய தலைமை நேற்று சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டது.

அதில், “இதே நாள், 1971-ம் ஆண்​டு. பாகிஸ்​தானை போருக்கு தயார்​படுத்த அமெரிக்கா ஆயுதங்​களை வழங்​கியது” என்று குறிப்​பிடப்​பட்டு உள்​ளது. இந்​திய ராணுவம் வெளி​யிட்ட 1971 ஆகஸ்ட் 5-ம் தேதி​யிட்ட ஆங்​கில நாளிதழ் பதி​வில், அ்ப்​போதைய அமைச்சர் வி.சி. சுக்லா மாநிலங்​களவை​யில் அளித்த விளக்​கம் விவரிக்​கப்​பட்டு உள்​ளது.

“பாகிஸ்​தானுக்கு ஆயுதங்​களை வழங்​கக்​கூ​டாது என்று நேட்டோ நாடு​கள், ரஷ்யா உள்​ளிட்ட நாடு​களிடம் வலி​யுறுத்தி உள்​ளோம். இதன்​படி பாகிஸ்​தானுக்கு ஆயுதங்​களை வழங்க ரஷ்​யா, பிரான்ஸ் மறுத்​து​விட்​டன. ஆனால் அமெரிக்கா மிகக் குறைந்த விலையில் பாகிஸ்​தானுக்கு தொடர்ந்து ஆயுதங்​களை விற்​பனை செய்து வரு​கிறது.

கடந்த 1954-ம் ஆண்டு முதல் பாகிஸ்​தானுக்கு 2 பில்​லியன் டாலர் மதிப்​பிலான ஆயுதங்​களை அமெரிக்கா வழங்கி உள்​ளது. இதே போல சீனா​வும் பாகிஸ்​தானுக்கு தேவை​யான ஆயுதங்​களை மிகக் குறைந்த விலையில் விநி​யோகம் செய்து வரு​கிறது” என்று வி.சி. சுக்லா கூறியது நாளிதழில் பதிவு செய்​யப்​பட்டு உள்​ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​க்கால​மாக இந்​தி​யா​வுக்கு எதி​ராக கருத்​துகளை தெரி​வித்து வரு​கிறார். இந்த சூழலில் இந்​திய ராணுவம் வெளி​யிட்ட நாளிதழ் பதிவு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாகக் கருதப்​படு​கிறது. ராணுவத்​தின்​ பதிவு சமூக வலை​தளங்​களில்​ வைரலாக பரவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x