Published : 05 Aug 2025 08:18 AM
Last Updated : 05 Aug 2025 08:18 AM

ராகுல் தலைமையில் 7-ம் தேதி இண்டியா கூட்டணி கூட்டம்

புதுடெல்லி: மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல்​காந்தி தலை​மை​யில் இண்​டியா கூட்​டணி கூட்​டம் நாளை மறு​தினம் நடை​பெறவுள்​ளது. இதில் பல விஷ​யங்​கள் குறித்து ஆலோ​சனை செய்​யப்​படும். இந்த கூட்​டம் கடந்​தாண்டு மக்​களவை தேர்​தல் தோல்விக்​குப்​பின், நடை​பெறும் இண்​டியா கூட்​ட​ணி​யின் முதல் கூட்​டம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மேலும், பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில், நாடாளு​மன்​றத்தை நோக்கி வரும் 8-ம் தேதி பேரணி செல்​ல​வும் இண்​டியா கூட்​டணி திட்​ட​மிட்​டுள்​ளது. வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தம் முறை​கேடு​களுக்கு வழி​வகுக்​கும் எனவும், அரசி​யல் சாசன விதி​முறை​களை தேர்​தல் ஆணை​யம் மீறு​வ​தாக​வும் இண்​டியா கூட்​டணி கட்​சிகள் கருத்து தெரி​வித்​துள்​ளன.

ராகுல் தலை​மை​யில் நடை​பெறும் இண்​டியா கூட்​டணி கூட்​டத்​தில் பங்​கேற்​பதை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள தலை​வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் உறுதி செய்​துள்​ளனர். திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் அக்​கட்சி எம்​.பி. அபிஷேக் பானர்ஜி கலந்து கொள்​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அதே​போல சிவசேனா (உத்​தவ்), தேசி​ய​வாத காங்​கிரஸ் (சரத்​ப​வார்), ஜார்​க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்​றும் இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள இதர கட்சி தலை​வர்​கள் பங்​கேற்​பர் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. திமுக சார்​பில், தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினும் இந்த கூட்​டத்​தில் பங்​கேற்க வாய்ப்​புள்​ளது. இந்த கூட்​டம் இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகளை மீண்​டும் ஒருங்​கிணைப்​ப​தில்​ மிக முக்​கிய​மான​தாக பார்க்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x