Published : 05 Aug 2025 06:49 AM
Last Updated : 05 Aug 2025 06:49 AM

பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

புதுடெல்லி: பிஹாரில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) குறித்து விவா​திக்க கோரி எதிர்க்​கட்​சிகள் தொடர்ச்​சி​யாக முழக்​கம் எழுப்​பியதையடுத்து நேற்று மக்​களவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

விரை​வில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள பிஹார் மாநிலத்​தில் தேர்​தல் ஆணை​யம் வாக்​காளர் பட்​டியல் சரி​பார்ப்பு பணி​களை தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. அந்த மாநிலத்​திலிருந்து இடம்​பெயர்ந்து சென்​றவர்​களின் பெயர்​கள் மற்​றும் இறந்​தவர்​களின் பெயர்​களை நீக்​கும் பணி​யில் தேர்​தல் ஆணை​யம் ஈடு​பட்​டுள்​ளது.

இது​வரை பல லட்​சம் பேர் வாக்​காளப் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து மக்​களவை செயல்​பாடு​களை தொடர்ந்து முடக்கி வரு​கின்றன .

நேற்று மக்​களவை கூடியபோது பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தம் குறித்து விவா​திக்க கோரி தொடர்ந்து எதிர்க்​கட்சிகள் கூச்​சல் குழப்​பத்​தில் ஈடு​பட்​டன. அப்​போது சபா​நாயகர் ஓம்​பிர்லா கூறுகை​யில், ‘‘கடந்த காலத்​தில் நான் செய்​தது போல் உங்கள் ஒவ்​வொரு​வருக்​கும் உங்​களது பிரச்​சினை​களை எழுப்ப போது​மான நேரம் தரு​வேன், ஆனால் தயவுசெய்து சபையை நடத்த அனு​ம​திக்​க​வும்’’ என்று ஓம் பிர்லா கோரிக்கை விடுத்​தார்.

ஆனால், சபா​நாயகரின் வேண்​டு​கோளை எதிர்க்​கட்​சிகள் புறக்​கணித்​தன. இதனால் பிற்​பகல் 2 மணி வரை சபையை ஒத்​திவைக்க வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டது. பிற்​பகல் 2 மணிக்கு அவை கூடியபோது, காங்​கிரஸ் உறுப்​பினர்​கள் உட்பட எதிர்க்​கட்சி எம்பிக்கள் மீண்​டும் எழுந்து நின்று கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அமளி​ தொடர்ந்ததால் மக்​களவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x