Published : 03 Aug 2025 07:24 AM
Last Updated : 03 Aug 2025 07:24 AM

அமெரிக்கா நம்பகத்தன்மையற்ற நாடு: ரஷ்ய தூதர் டெனிஸ் அலி​போவ் கருத்து

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் இறக்​கும​தி​யாகும் இந்​தி​யப் பொருட்​களுக்கு 25 சதவீத வரியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்​துள்​ளார்.

இதுகுறித்து ரஷ்​யா​வின் செய்தி நிறு​வன​மான ஆர்​டி-க்கு நேற்று அளித்த பேட்​டி​யில் இந்​தி​யா​வுக்​கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலி​போவ் கூறிய​தாவது: ரஷ்​யா​விடம் எண்​ணெய் கொள்​முதல் செய்​யக் ​கூ​டாது என அமெரிக்கா எச்​சரிக்கை செய்​துள்​ளது. இது​போன்ற அச்​சுறுத்​தல்​கள் மற்​றும் தடைகளை விதிப்​ப​தன் மூலம் அமெரிக்​கா​வானது இந்​தி​யா​வுட​னான அதன் நல்​லுறவு​களை குறைம​திப்​புக்கு உட்​படுத்​துகிறது.

அமெரிக்கா​வும் ஐரோப்​பிய ஒன்​றிய நாடு​களும் தடை அச்​சுறுத்​தல்​களால் தங்​களை நம்​பகத்​தன்​மையற்ற நாடு​களாக வெளிப்​படுத்​திக் கொண்​டுள்​ளன. அமெரிக்​கா​விலிருந்து வரும் அச்​சுறுத்​தல்​கள் நிச்​சய​மாக இந்​தி​யா​வுக்கு நம்​பிக்​கை​யைத் தரவில்​லை. அமெரிக்கா நம்​பகத்​தன்​மையற்ற கூட்​டாளி நாடாகவே உள்​ளது. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x