Last Updated : 02 Aug, 2025 05:37 PM

1  

Published : 02 Aug 2025 05:37 PM
Last Updated : 02 Aug 2025 05:37 PM

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை ஆயுள்: பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்​கொடுமை வழக்​கில் குற்​ற​வாளி என பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்​வேறு பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தின.

இதையடுத்து அவரது வீட்டு பணிப்​பெண், மஜத கிராம பஞ்​சா​யத்து தலைவி உட்பட 4 பெண்​கள் பிரஜ்வலுக்கு எதி​ராக புகார் அளித்​தனர். அதன்​பேரில் அவர் மீது 5 பாலியல் வன்​கொடுமை வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். சிறப்பு விசா​ரணை பிரிவு போலீ​ஸார் இவ்​வழக்கில் 1,632 பக்க குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​தனர்.

பெங்​களூரு​வில் மக்​கள் பிர​தி​நி​தி​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் வழக்கு நடை​பெற்றது. அனைத்​துகட்ட விசா​ரணை​யும் நிறைவடைந்த நிலை​யில் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்ற நீதிபதி சந்​தோஷ் கஜனன் பட், நேற்று (ஆகஸ்ட் 1) பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளித்தார். ‘‘இவ்​வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் அரசு தரப்​பால் சந்​தேகத்​துக்​கிட​மின்றி நிரூபிக்​கப்​பட்​டுள்​ளன. அதற்​கான சாட்​சி​யங்​களும், ஆவணங்​களும் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன் அடிப்​படை​யில் பிரஜ்வல் ரேவண்ணா குற்​ற​வாளி என்​பது உறு​தி​யாகி​யுள்​ளது. அவருக்​கான தண்​டனை விவரங்​கள் ஆகஸ்ட் 2-ம் தேதி (இன்​று) வெளி​யிடப்​படும்​'' என நீதிபதி சந்​தோஷ் கஜனன் பட் நேற்று தீர்ப்​பளித்​தார்.

அதன்படி இன்று தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் சாகும் வரை அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் நீதிபதி சந்தோஷ் பட் அறிவித்தார்.

குறைந்த தண்டனை வழங்குமாறு கெஞ்சிய ரேவண்ணா.. முன்னதாக, பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணா, "நான் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், எந்தப் பெண்ணும் தானாக முன்வந்து புகார் அளிக்கவில்லை. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது. அரசுத் தரப்பு வேண்டுமென்றே அவர்களை அழைத்து வந்து புகார் அளிக்க வைத்தது. எனக்கு குடும்பம் இருக்கிறது. 6 மாதங்களாக நான் எனது அம்மாவையும், அப்பாவையும் பார்க்கவில்லை. தயவு செய்து எனக்கு குறைவான தண்டனை கொடுங்கள். என் வாழ்க்கையில் நான் செய்த ஒரே தவறு அரசியலில் வேகமாக வளர்வதுதான்" என குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x