Published : 02 Aug 2025 07:55 AM
Last Updated : 02 Aug 2025 07:55 AM

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு

புதுடெல்லி: பிஹார் மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம்​(எஸ்​ஐஆர்) மூல​மாக பல லட்​சம் வாக்​காளர்​களை, வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்க தேர்​தல் ஆணை​யம் முயற்​சிக்​கிறது என காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து குற்றம்​சாட்டி வரு​கின்​றன.

இந்​நிலை​யில் நாடாளு​மன்ற வளாகத்​தில் செய்​தி​யாளர்​களு​டன் பேசிய ராகுல் காந்​தி, ‘‘மக்​களின் வாக்​கு​களை தேர்​தல் ஆணை​யம் திருடு​கிறது என்​ப​தற்​கான ஆதா​ரங்​கள் இருக்​கின்​றன’’ என்று கூறி​யிருந்​தார்.

இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் நேற்று வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: வாக்​கு​கள் திருடப்​படு​வ​தாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கூறிய அனைத்​தும் அடிப்​படை ஆதா​ரமற்​றவை, பொறுப்​பற்​றவை.

குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்​பட்​டாலும் அனைத்து தேர்​தல் அதி​காரி​களும் பாரபட்​சமின்​றி​யும் வெளிப்​படை​யாக​வும் பணி​யாற்​றுகின்​றனர். எனவே இது​போன்ற பொறுப்​பற்ற அறிக்​கைகளைப் புறக்​கணிக்​கு​மாறு கேட்​டுக்​கொள்​கிறோம். இவ்​வாறு தேர்​தல்​ ஆணை​யம்​ கூறியுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x