Published : 01 Aug 2025 07:12 AM
Last Updated : 01 Aug 2025 07:12 AM

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயார்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் கடந்த 22-ம் தேதி பதவி வில​கி​னார். அவரது ஐந்​தாண்டு பதவிக் காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருந்​தது. இந்​நிலை​யில் உடல்​நிலை காரணங்​களுக்​காக பதவி வில​கு​வ​தாக அவர் தனது ராஜி​னாமா கடிதத்​தில் கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் தேர்​தல் ஆணை​யம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலுக்​கான வாக்​காளர் பட்டியல் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இத்​தேர்​லுக்​கான அறிவிக்கை விரை​வில் வெளி​யாகும்.

இதன் பிறகு தேர்​தல் ஆணைய அலு​வல​கத்​தில் செயல்​படும் கவுன்ட்​டரில் வாக்​காளர் பட்​டியல் கிடைக்​கும்” என்று கூறி​யுள்​ளது. மக்களவை​யின் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட உறுப்​பினர்​களும் மாநிலங்​களவை​யின் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மற்​றும் நியமன உறுப்பினர்களும் குடியரசு துணைத் தலை​வரை தேர்ந்​தெடுப்​பார்​கள்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x