Last Updated : 31 Jul, 2025 07:11 AM

 

Published : 31 Jul 2025 07:11 AM
Last Updated : 31 Jul 2025 07:11 AM

கர்நாடகாவில் எச்.ஐ.வி பாதித்த தம்பியை கொலை செய்த அக்கா, மாமா: சொத்துக்காக கொல்லப்பட்டதாக தந்தை புகார்

பெங்களூரு: கர்​நாடக மாநிலத்தை சேர்ந்​தவர் மல்​லி​கார்​ஜுன் (23). கடந்த 23-ம் தேதி பெங்​களூரு​வில் இருந்து சித்​ரதுர்கா திரும்​பும்​போது கார் விபத்​தில் சிக்​கிய அவர் தாவணகெரே​வில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். மருத்​து​வப் பரிசோதனை​யின்​ போது அவருக்கு எச்​.ஐ.​வி. தொற்று உறுதி செய்​யப்​பட்​டது.

இதனிடையே மல்​லி​கார்​ஜுனின் உடல்​நிலை சீரா​காத​தால் அவரை உயர் சிகிச்​சைக்​காக பெங்​களூரு அழைத்​துச் செல்​லு​மாறு மருத்​து​வர்​கள் கூறினர். இதனால் மல்​லி​கார்​ஜுனின் தந்தை நாக​ராஜப்​பா, தனது மகள் நிஷா (25) மற்​றும் அவரது கணவர் மஞ்​சு​நாத்​திடம் பெங்​களூரு கொண்டு செல்​லு​மாறு கூறி​னார்.

இதையடுத்து நிஷா​வும் மஞ்​சு​நாத்​தும் மல்​லி​கார்​ஜுனை கார் மூலம் பெங்​களூரு அழைத்​துச் சென்​றனர். ஆனால் அவர் பெங்களூரு செல்​லும் வழி​யிலே இறந்து விட்​ட​தாக உடலை ஜூலை 26-ம் தேதி ஊருக்கு கொண்டு சென்​றனர். இந்​நிலை​யில் மல்லிகார்​ஜுனின் கழுத்​தில் காயம் இருப்​பதை கண்டு சந்​தேகமடைந்த அவரது தந்தை நாக​ராஜப்பா ஹொலேகெரே போலீஸில் புகார் அளித்​தார்.

போலீ​ஸார் இரு​வரிட​மும் விசா​ரணை நடத்​திய போது, ‘‘என் தம்​பிக்கு எச்​.ஐ.​வி. பாதிக்​கப்​பட்ட விஷ​யம் உறவினர்​களுக்கு தெரிந்தால் அவமான​மாக இருக்​கும். விபத்​தில் படு​கா​யம் அடைந்​த​தால் அவரை காப்​பாற்ற நிறைய பணம் தேவைப்​படும். குடும்ப மானத்தை காப்​பாற்​று​வதற்​காக​வும் பணப் பிரச்​சினையை தீர்ப்​ப​தற்​காக​வும் மல்​லி​கார்​ஜுனை கழுத்தை நெறித்து கொலை செய்​தோம்’’ என கூறி​யுள்​ள‌னர்.

இதையடுத்து நிஷா, அவரது கணவர் மஞ்​சு​நாத் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து கைது செய்​தனர். இதனிடையே, எனது மகனை அவனுடன் பிறந்த அக்கா​வும் மாமா​வும் சொத்​துக்​காக கொலை செய்​துள்​ளனர். இந்த கொலை எச்​.ஐ.​வி. காரண​மாக நடக்​க​வில்லை என நாக​ராஜப்​பா போலீ​ஸில்​ புகார்​ அளித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x