Last Updated : 29 Jul, 2025 02:02 PM

 

Published : 29 Jul 2025 02:02 PM
Last Updated : 29 Jul 2025 02:02 PM

நிமிஷா மரண தண்டனை ரத்தா? - வெளியுறவு அமைச்சக வட்டாரம் மறுப்பு!

புதுடெல்லி: ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரம் மறுத்துள்ளது. கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்திய நிலையில் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சக வட்டாரம், “நிமிஷா பிரியா வழக்கில் சில தனி நபர்கள் பகிரும் தகவல் துல்லியமானது அல்ல.” என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதி செய்வது போல், நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்தியினை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்த மதத் தலைவர் அபுபக்​கர் முஸ்​லி​யார், அந்தப் பதிவை நீக்கியுள்ளார்.

குற்றப் பின்னணி என்ன? - கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனா​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் செவிலிய​ராக பணி​யில் சேர்ந்​தார். கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜி​னாமா செய்த நிமிஷா, ஏமனைச் சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து அங்கு புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார்.

கருத்து வேறு​பாடு காரண​மாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்​திக்​கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்​தி​னார். இதில் அவர் உயிரிழந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த சனா நகர நீதி​மன்​றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்​டனை விதித்​தது. இதை ஏமன் உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​தது. இதையடுத்​து, ஜூலை 16-ம் தேதி நிமிஷாவுக்கு மரண தண்​டனை நிறைவேற்​றப்​படும் என்று ஏமன் அரசு அறி​வித்​திருந்​தது.

சட்​டரீ​தி​யான முயற்​சிகள் தோல்வி அடைந்த நிலை​யில், மெஹ்தி குடும்​பத்​தினருக்கு ரூ.8.6 கோடி குரு​திப் பணம் அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்​பத்​தினர் தீவிர முயற்​சிகளை மேற்​கொண்டு வருகின்றனர். இதற்கு தேவை​யான உதவி​களை மத்​திய அரசு வழங்கி வரு​கிறது. இதனிடையே, நிமிஷா​வின் மரண தண்​டனையை தள்​ளிவைக்​கு​மாறு மத்​திய அரசு சார்​பில் ஏமன் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்​டது.

இந்த விவ​காரத்​தில் ஏமனின் நட்பு நாடான ஈரான் மூல​மாக​வும் மத்​திய அரசு அழுத்​தம் கொடுத்​தது. கேரளாவை சேர்ந்த முஸ்​லிம் மத தலை​வர் கிராண்ட் முப்தி ஏ.பி.அபுபக்​கர் முஸ்​லி​யாரும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்தப் பின்னணியில் நிமிஷா பிரி​யா​வின் மரண தண்​டனை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x