Published : 29 Jul 2025 06:53 AM
Last Updated : 29 Jul 2025 06:53 AM

ஆளில்லா முதல் விண்கலம் டிசம்பரில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

சென்னை: இஸ்ரோவின் ஆளில்லா முதல் விண்கலம் டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘நாசா இஸ்ரோ சிந்தடிக் அபெர்ச்சர் ரேடார்’ (நிசார்) என்ற செயற்கைக்கோள் வரும் 30-ம் தேதி (நாளை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் உள்ள எஸ்-பேண்ட் சிந்தடிக் அபெர்ச்சர் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.

மேகமூட்டம், மழை என எந்த சூழலாக இருந்​தா​லும், இரவு - பகல் என 24 மணி நேர​மும் பூமியை இந்த செயற்​கைக் கோள் துல்​லிய​மாக புகைப்​படம் எடுக்​கும். பூமி​யில் உள்ள இயற்கை வளங்​களை கண்​டு​பிடிக்​க​வும், நிலச்​சரிவு போன்ற பேரிடர் பாதிப்​பு​களை கண்​டறிய​வும் இது உதவும்.

மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்​புவதற்கு முன்பு ஆளில்​லாத 3 விண்​கலங்​களை விண்​வெளிக்கு அனுப்ப வேண்​டும். அதற்​கான முதல் விண்​கலம் ஹரி​கோட்​டா​வில் தயா​ராகி வரு​கிறது. வரும் டிசம்​பரில் அதை அனுப்ப உள்​ளோம். அதில் மனிதருக்கு பதிலாக ரோபோட்டை வைத்து அனுப்ப இருக்​கிறோம். இந்த திட்​டம் வெற்​றியடைந்​தால், 2026-ல் மேலும் 2 ஆளில்லா விண்​கலங்​கள் அனுப்​பப்​படும். இந்த சோதனை​கள் வெற்றி பெற்ற பிறகு, 2027 மார்ச்​சில் விண்​வெளிக்கு மனிதரை அனுப்​பும் திட்​டத்தை செயல்​படுத்​து​வோம்.

நில​வில் இறங்கி மாதிரி​களை எடுத்து வரு​வதற்​கான ‘சந்​திர​யான் 4’ பணி​கள் திட்​ட​மிட்​டபடி நடந்து வரு​கின்​றன. இது 2027-ல் செலுத்​தப்​படும். ஜப்​பானுடன் இணைந்து தயாரிக்​கப்​பட்டு வரும் ‘சந்​திர​யான் 5’, நில​வுக்கு 2028-ல் அனுப்​பப்​படும். சந்​திர​யான்-5 நில​வில் 100 நாட்​கள் ஆய்வு பணி​யில் இருக்​கும். நாம் அனுப்​பிய 55 செயற்​கைக் கோள்​கள், தற்​போது விண்​ணில் பயன்​பாட்​டில் உள்​ளன. இந்த எண்​ணிக்​கையை அடுத்த 4 ஆண்டுகளில் 3 மடங்கு அதி​கரிக்​கும் வகை​யில் திட்ட பணி​கள் நடந்​து வரு​கின்​றன. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x