Published : 26 Jul 2025 08:09 AM
Last Updated : 26 Jul 2025 08:09 AM
புதுடெல்லி: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியும். அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கெய்ர் ஸ்டார்மர் ஆங்கிலத்திலும், பிரதமர் நரேந்திர மோடி இந்தியிலும் பேசினர்.
பிரதமர் மோடியின் இந்தி உரையை ஒரு மொழி பெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதேபோல பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் ஆங்கில உரையை மற்றொரு மொழிபெயர்ப்பாளர் இந்தியில் மொழிபெயர்த்து கூறினார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஸ்டார்மர் பேசும்போது இருநாடுகளுக்கும் பெருமளவில் முதலீடுகள் குவியும் என்று குறிப்பிட்டார். அவரது ஆங்கில உரையை மொழிபெயர்ப்பாளர் இந்தியில் மொழிபெயர்த்தபோது பதற்றத்தில் தடுமாறினார்.
இதை கவனித்து குறுக்கிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “கவலைப்படாதீர்கள், நீங்கள் சில நேரங்களில் ஆங்கில வார்த்தைகளை தாராளமாக பயன்படுத்தலாம்’’ என்றார். பிரதமர் மோடியின் கனிவால் நெகிழ்ந்த மொழிபெயர்ப்பாளர், நன்றி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்தி, ஆங்கில புலமையால் இறுக்கம் மறைந்து கலகலப்பான சூழல் உருவானது. இந்த சுவாரசிய உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT