Published : 26 Jul 2025 07:15 AM
Last Updated : 26 Jul 2025 07:15 AM

ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 8 மாணவர்கள் உயிரிழப்பு; 30 பேர் காயம்

ஜலவாட்: ராஜஸ்​தானின் ஜலவாட் மாவட்​டம், பிப்​லோட் என்ற கிராமத்​தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இப்பள்ளி​யில் நேற்று காலை 8.30 மணி​யள​வில் வகுப்​பறை​களுக்கு வந்த மாணவர்​கள், இறைவணக்க நிகழ்ச்​சிக்கு தயாராக இருந்தனர். அப்​போது பள்​ளிக் கட்​டிடத்​தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்​தது.

இதில் சுமார் 40 மாணவர்​கள் இடி​பாடு​களில் சிக்​கிக் கொண்​டனர். பதறிப்​போன ஆசிரியர்​களும் கிராம மக்​களும் மீட்​புப் பணி​யில் இறங்​கினர். பின்​னர் அதி​காரி​களும், பேரிடர் மீட்​புக் குழு​வினரும் அங்கு விரைந்​தனர்.

இந்​நிலை​யில் இந்த விபத்​தில் 8 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். மேலும் 30 மாணவர்​கள் காயம் அடைந்​தனர். இவர்​கள் மனோகர்தானா, ஜலவாட் நகர மருத்​து​வ​மனை​களில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் இரு​வர் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் உள்ளனர். ‘எக்​ஸ்' தளத்​தில் பிரதமர் மோடி வெளி​யிட்ட பதி​வில், “இந்த கடின​மான தருணத்​தில் பாதிக்​கப்​பட்ட மாணவர்​கள், அவர்களின் குடும்​பத்​தினர் குறித்து கவலைப்​படு​கிறேன். காயம் அடைந்​தவர்​கள் விரை​வில் குணமடைய பிரார்த்​திக்​கிறேன்’’ என்று கூறி​யுள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x