Last Updated : 24 Jul, 2025 07:47 AM

2  

Published : 24 Jul 2025 07:47 AM
Last Updated : 24 Jul 2025 07:47 AM

அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்? -  ராஜ்நாத், நட்டா, நிர்மலா சீதா​ராமன், சசிதரூர் என நீளும் பட்டியல்

ராஜ்நாத் சிங், கே.பி. நட்டா, நிர்மலா, சசி தரூர்

புதுடெல்லி: ​குடியரசு துணைத் தலை​வர் ப​த​வி​யில் இருந்த ஜெகதீப் தன்​கர் 2 நாட்​களுக்கு முன்​னர் திடீரென ராஜி​னாமா செய்தார். இந்​திய அரசி​யலமைப்​பின் பிரிவு 68-ன் படி, புதிய குடியரசு துணைத் தலை​வரை அடுத்த 6 மாதங்​களுக்​குள் தேர்வு செய்ய வேண்​டும். இதன்​படி, செப்​டம்​பர் 2025-க்​குள் இதற்​கான தேர்​தல் நடத்​தப்பட உள்​ளது.

மத்​தி​யில் ஆட்​சிக்கு தலைமை வகிக்​கும் பாஜக, அடுத்த 10 ஆண்​டு​களில் வரவிருக்​கும் தேர்​தல்​களை கருத்​தில் கொண்​டு, முக்​கிய அரசி​யலமைப்பு பதவி​களுக்​கான நியமனங்​களை திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது. குடியரசு துணைத் தலை​வரை தேர்ந்​தெடுக்க நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களில் மொத்​தம் உள்ள 782 உறுப்​பினர்​களில், 394 பேரின் ஆதரவு தேவை.

பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு (என்​டிஏ) மக்​களவை​யில் 293 எம்​.பி.க்​களும், மாநிலங்​களவை​யில் 129 எம்.பி.க்​களும் ஆதர​வாக உள்​ளனர். என்​டிஏ.வுக்கு பெரும்​பான்மை உள்​ளது. எதிர்க்​கட்​சிகளிடம் 150 எம்​.பி.க்​களே உள்​ளனர். அதனால், எதிர்க்​கட்​சிகள் போட்டி வேட்​பாளரை அறி​வித்​தா​லும் வெற்றி பெறு​வதற்கு வாய்ப்​பில்​லை.

குடியரசு துணைத் தலை​வர் பதவிக்கு ஹரிவன்ஷ் நாராயண் சிங் முதலிடத்​தில் உள்​ளார். மாநிலங்​களவை துணைத் தலை​வ​ராக இருக்​கும் இவர் ஜேடி​யுவை சேர்ந்​தவர். மாநிலங்​களவையை நடத்​து​வ​தில் அனுபவம் உள்​ளவர். பிஹார்​வாசிகளில் ராம்​நாத் தாக்குரின் பெயரும் இந்​தப் பட்​டியலில் உள்​ளது, பிஹார் முன்​னாள் முதல்​வர் கற்​பூரி தாக்​கூரின் மகன்​தான் ராம்​நாத்.

கற்​பூரி தாக்​குருக்கு நாட்​டின் உயரிய விரு​தான பாரத ரத்னா சமீபத்​தில் வழங்​கப்​பட்​டது. முதல்​வர் நிதிஷ் குமாரின் பெயர் இந்த பதவிக்கு அடிபட்​டாலும் அவரது உடல்​நிலை மற்​றும் மனநிலை அதற்கு ஏற்​ற​தாக இல்லை என்று கூறப்​படு​கிறது.

மேலும், மத்​திய அமைச்​சர்​கள் ராஜ்​நாத் சிங், ஜே.பி.நட்​டா, நிர்​மலா சீதா​ராமன், நிதின் கட்​கரி, காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் பெயர்​களும் குடியரசு துணைத் தலை​வர் பதவிக்கு அடிபடு​கின்​றன. இதற்​கிடை​யில், பாஜக அரசையும் பிரதமர் மோடியை​யும் பகிரங்​க​மாக பாராட்டி வரும் காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் பெயரும் இந்த பட்​டியலில் உள்​ள​தாக தெரி​கிறது. சசி தரூரை முன்​னிறுத்​து​வதன் மூலம்​ காங்​கிரஸை உள்​ளிருந்​து உடைக்​க பாஜக விரும்​புவ​தாக கூறப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x